புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிட்டுப்பட நடிகர் என முத்திரை குத்தப்பட்ட சூப்பர் ஹிட் பட ஹீரோ.. ஷகிலாவிடம் புலம்பி தீர்த்த அவலம்

ஹீரோக்கள் ஆரம்ப காலங்களில் பலதரப்பட்ட படங்களில் நடித்தாலும் தனக்கென்ன அந்தஸ்து கிடைத்தவுடன் ஆக்சன் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள். அவர்களது ரசிகர்களும் இதை தான் எதிர்பார்க்கிறார்கள். அப்படிதான் விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் பெரும்பாலும் ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து வந்த ஹீரோவுக்கு மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்க கிட்டதட்ட 25 படங்களுக்கு மேல் மலையாள படங்களிலேயே நடித்து விட்டார். ஆனால் மலையாள சினிமாவில் நடித்ததால் அவரது வாழ்க்கையை சீரழிந்து விட்டது.

Also Read : ஷகிலா கேட்ட கேள்வியில் கதறிய கவர்ச்சி புயல்.. தெரிஞ்சுதான் காட்டுறேன்னு இதுல பெருமை வேற

அந்த ஹீரோ தமிழ் சினிமாவில் நடிக்கும் போது 90 ஹீரோயின்கள் எல்லோருக்குமே அவர் மீது அவ்வளவு பிரியம். அப்படி அழகுடன் இருந்த அந்த நடிகர் மலையாள சினிமாவில் பெரும்பாலும் பிட்டு படங்களில் நடித்து விட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் மீண்டும் தமிழ் சினிமாவுக்கே போய்விடலாம் என்ற முடிவை எடுத்தார்.

ஆனால் பிட்டு நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டதால் தொடர்ந்து அது போன்ற வாய்ப்பு தான் தமிழ் சினிமாவிலும் கிடைத்துள்ளது. ஆகையால் அந்த மாதிரி கதாபாத்திரங்களுக்கு தான் இவர் லாய்க்கு என்று பட வாய்ப்பைக் கொடுக்காமல் தவிர்த்து விட்டனர்.

Also Read : சரமாரியாக விட்டு விளாசிய ஷகிலா.. விஷத்தை கக்க முடியாமல் பல்லு புடுங்கிய பாம்பான பயில்வான்

இதற்கெல்லாம் காரணம் மலையாள சினிமாவில் அவர் நடித்த அடல்ட் படம் தான். அப்படி நடித்ததால் தனது கேரியரே போய்விட்டதாக நடிகை சகிலாவிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைப் பேட்டி ஒன்றில் ஷகிலா கூறியிருந்தார். நல்ல நடிகராக இருந்தாலும் இந்த படங்களில் நடித்து அவரது சினிமா வாழ்க்கை முடக்கப்பட்டது.

அதேபோல் தான் ஷகிலாவும் ஆரம்பத்தில் கவர்ச்சி படங்களில் நடித்து வந்ததால் தொடர்ந்து அது போன்ற படங்களே அவருக்கு வந்தது. வேறு வழி இன்றி ஷகிலா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற பெயரைப் பெற்றார். தற்போது வரை அதுவே அவருக்கு நிலைக்கு நிற்கிறது.

vetri

Also Read : இளம் வயதில் தமிழில் ஷகிலா கலக்கிய 4 படங்கள்.. வயதுக்கு வராமல் கவுண்டமணியை பரிதவிக்க விட்ட கவர்ச்சி புயல்

Trending News