Gossip: இரண்டு உச்ச நடிகர்கள் பிரபலமாக இருந்த காலத்திலேயே இந்த ஹீரோவும் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார். பல வெற்றி படங்களை கொடுத்திருக்கும் இந்த ஹீரோ வெளிமாநிலத்தில் இருந்து நடிக்க வந்த நடிகையுடன் சில படங்களில் நடித்தார்.
அப்போது கேமராவுக்கு முன் இருந்த கெமிஸ்ட்ரி நிஜத்திலும் வொர்க் அவுட் ஆனது. இருவரும் தனியாக ரகசிய குடித்தனம் நடத்தும் அளவுக்கு நெருக்கத்தை வளர்த்து வந்தனர்.
இத்தனைக்கும் நடிகர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் என வாழ்ந்து வந்தார். ஆனால் நடிகையின் மீது அப்படி என்ன மயக்கமோ தெரியவில்லை குடும்பத்தை மறந்து சதா காலமும் இவரின் காலடியிலேயே இருந்திருக்கிறார்.
சொத்துக்களை பறிகொடுத்த ஹீரோ
நடிகையும் நடிகரின் காசில் பங்களா, நகை நட்டு என வாங்கி குவித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஆரம்பமானது. இதனால் நடிகை நடிகரை பிரேக் அப் செய்த கையோடு சொந்த ஊருக்கே பொட்டியை கட்டினார்.
இதை எதிர்பார்க்காத அந்த ஹீரோ தன் காசியில் வாங்கிய சொத்துக்களை கேட்டிருக்கிறார். ஆனால் அந்த நடிகையோ அதெல்லாம் தர முடியாது என சொல்லிவிட்டு சிட்டாக பறந்து விட்டாராம்.
ஏற்கனவே நடிகரின் இந்த போக்கினால் அவருடைய மனைவி செம டென்ஷனில் இருந்திருக்கிறார். இப்போது சொத்துக்களும் பறிபோனதால் கணவரை விவாகரத்து செய்து இருக்கிறார். அதன் பிறகு நடிகர் தன் கடனை அடைக்க வேறு ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டது தனி கதை.
முன்னணி பிரபலங்களின் கிசுகிசு செய்திகள்
- இப்ப மட்டும் அந்த நடிகை கோமாவுல இருக்காங்களா
- பிளாஸ்டிக் சர்ஜரியால் விகாரமான முகம்
- கல்யாணத்துக்கு அப்புறம் காணாம போன காதல்