புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தினந்தோறும் ஜெயலலிதாவை பார்க்க ஆசைப்பட்ட நடிகர்.. அம்மாவின் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்தவர்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அயன் லேடியாக வலம் வந்தவர்தான் ஜெயலலிதா. அதிலும் இவரின் கம்பீரமான குரல் இன்று வரையிலும் எதாவது ஒரு இடத்தில ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார், அப்படியாக இவர் நடித்த படத்தில் முதன் முதலில் நடித்த நடிகர் ஒருவர் ஜெயலலிதாவின் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்துள்ளார்.

அதிலும் ஜெயலலிதா முதன் முதலில் தமிழில் நடித்த திரைப்படம் வெண்ணிற ஆடை. இப்படத்தில் இவருடன் நடித்தவர் மூர்த்தி, இந்த படத்தின் மூலம் பிரபலமான இவர் அதன் பிறகு வெண்ணிற ஆடை மூர்த்தி என்றே இன்றளவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் வைத்துள்ளார் மூர்த்தி. 

Also Read: ஆங்கிலத்தில் சரளமாய் பேசக்கூடிய 5 நட்சத்திரங்கள்.. ஆங்கிலேயர்களின் வாயை அடைத்த அயன் லேடி

மேலும் இவர்கள் இருவரும் நண்பர்களாகவே பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தான் ஜெயலலிதா நீங்கள் ஜாதகம் பார்ப்பீர்களாமே என் ஜாதகத்தையும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதன்பின் ஜெயலலிதாவின் ஜாதகத்தை கணித்த மூர்த்தி சினிமாவில் சிறிது காலம் மட்டுமே உங்களின் ஆதிக்கம் இருக்கும். 

அதன்பின் நீங்கள் அரசியலில் களம் இறங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறியுள்ளார். அதிலும் அரசியலில் புகழின் உச்சிக்கே செல்வீர்கள் என்பது போல் தெரிவித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத இவர் எனக்கு அரசியலைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று கூறியுள்ளார்.

Also Read: யாரிடமும் தலைவணங்காத அயன் லேடி ஜெயலலிதாவின் அறியாத சுவாரசியங்கள்.. முதல் சம்பளமும், தீராத சோபன் பாபு காதலும்

ஆனால் மூர்த்தி அன்று கூறியது போலவே அரசியலில் புகழின் உச்சிக்கே சென்றார் ஜெயலலிதா. அதுமட்டுமல்லாமல் இரும்பு பெண்மணி ஆகவே வலம் வந்தார். மேலும் இவர் முதல்வராக வளர்ந்தது புகழின் உச்சியில் இருந்த பொழுதுபிறகு வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜெயலலிதாவை பார்த்து ஒரு உதவி ஒன்றினை கேட்டுள்ளார். அதற்கு அம்மா எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் உங்களை தினம் தோறும் பார்க்க அனுமதி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஜெயலலிதா உங்களுக்கு எனது பர்சனல் போன் நம்பரை தருகிறேன். எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் தயங்காமல் என்னை வந்து சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு ஜெயலலிதா வெண்ணிற ஆடை மூர்த்தி மீது மரியாதையும் அளவு கடந்த பாசமும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் சாதித்து காட்டிய 6 பிரபலங்கள்.. சிங்கப் பெண்ணாக கர்ஜித்த ஜெயலலிதா

Trending News