சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

உதவி செய்வதில் விஜயகாந்தையே மிஞ்சிய நடிகர்.. நாட்டை விட்டுப் போனாலும் வாரி கொடுக்கும் வள்ளல்

கேப்டன் விஜயகாந்த் எப்படிப்பட்ட தங்க மனசுக்காரர் என்று இப்போதும் கூட சினிமா தொழிலாளர்கள் சிலாக்கித்து பேசுவார்கள். இவர் நடிகராக இருந்த போது மட்டுமல்லாமல் நடிகர் சங்கத் தலைவர், அரசியல் கட்சி தலைவர் என்று அடுத்தடுத்த நிலைக்கு சென்ற போதிலும் கூட தன்னைத் தேடி வரும் அனைவருக்கும் உதவி செய்தார்.

அவரைப் போலவே சினிமா தொழிலாளர்களுக்கு சத்தம் இல்லாமல் உதவி செய்யும் ஒரு நடிகரும் இருக்கிறார். தற்போது அவர் இந்த நாட்டை விட்டு சென்றிருந்தாலும் மறைமுகமாக இன்னும் பலருக்கும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என்று அனைத்து கேரக்டர்களிலும் கலக்கி வந்த நெப்போலியன் தான்.

Also read: அமெரிக்காவில் பிரம்மாண்டமாக வாழும் நெப்போலியன்.. தியேட்டர், பார், லிஃப்ட் என மிரள வைக்கும் புகைப்படங்கள்

உடல்நலம் பாதிக்கப்பட்ட இவருடைய மூத்த மகனுக்கு அமெரிக்காவில் சிகிச்சை செய்து வந்த நெப்போலியன் தற்போது அங்கேயே நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டார். வெளிநாட்டில் இருந்தாலும் இப்போதும் அவர் இந்தியாவில் இருக்கும் பல ஏழை மக்களுக்கு உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார். அதாவது அவர் தன் மகனைப் போன்று பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக சொந்தமாக ஒரு மருத்துவமனையே நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதில் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பலருக்கும் இவர் இலவசமாக சிகிச்சை கொடுக்கிறார். அது மட்டுமல்லாமல் இவருக்கு இந்தியாவில் சொந்தமாக ஒரு ஐடி கம்பெனியும் இருந்தது. அப்போது திரை உலகில் வேலை பார்த்த டெக்னீசியன்கள், லைட் மேன் போன்ற யாராக இருந்தாலும் அவர்களுடைய வீட்டில் படித்தவர்கள் இருந்தால் உடனே நெப்போலியன் அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை போட்டு கொடுத்து விடுவாராம்.

Also read: நடிப்பு அவசியம் இல்ல, பிசினஸில் கல்லா கட்டும் 5 நடிகர்கள்.. கெஞ்சி கூப்பிட்டும் வராத நெப்போலியன்

இப்படி அவரால் முன்னுக்கு வந்த எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள். இப்போதும் கூட அவர் அமெரிக்காவில் விவசாயம் மற்றும் சொந்த பிசினஸ் செய்து வருகிறார். அதில் அவருடைய விவசாய நிலத்தில் வேலை பார்ப்பவர்களில் பாதிக்கும் ஏற்பட்டவர்கள் இந்தியர்கள் தான். இப்படி ஒவ்வொருவருக்கும் உதவி செய்து வரும் இவர் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறார்.

அந்த வகையில் இவர் நடிக்கும் படங்களில் தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டால் உடனே வேண்டாம் என்று மறுத்து விடுவாராம். இப்படி எத்தனையோ படங்கள் இவர் சம்பளம் இல்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சினிமாவில் கிசு கிசு, சர்ச்சை செய்திகள் போன்ற எதிலும் சிக்காத நடிகரும் இவர் ஒருவர் தான். அப்படிப்பட்ட அவர் இன்று நாட்டை விட்டு சென்றாலும் தன்னை தேடி வருபவர்களுக்கும், நம்பியவர்களுக்கும் வள்ளலாக வாரி வழங்கி வருகிறார்.

Also read: உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்தவர்.. பழசை மறக்காமல் இன்று வரை நெப்போலியன் செய்யும் வேலை

Trending News