வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

புது காரில் மாட்டுக்கு வந்த வைக்கோல், புண்ணாக்கு.. சிவாஜிக்கு பாடம் புகட்டிய குசும்புக்கார நடிகர்

Actor Sivaji: நடிகர் திலகம் என்றாலே ஒரு கெத்து தான். அப்படி ஒரு மரியாதையோடு தான் அவர் திரையுலகில் வலம் வந்தார். அந்த மதிப்பும், பெருமையும் இப்போதும் இருக்கிறது. அப்படிப்பட்டவருக்கு ஒரு குசும்புக்கார நடிகர் பாடம் புகட்டி இருக்கிறார் என்றால் யாராலும் நம்ப முடியாது தான்.

ஆனால் அதுதான் உண்மை. நடிகவேள் என்று அறியப்படும் எம் ஆர் ராதா தான் அந்த நடிகர். ஒருமுறை படப்பிடிப்பில் இருக்கும் போது இவர் சிவாஜியிடம் வீட்டில் சென்று மதிய உணவு எடுத்து வர வேண்டும். அதனால் உங்கள் காரை கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

Also read: சிவாஜி விழாவில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அவமானம்.. கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி

ஆனால் நடிகர் திலகம் அதற்கு மறுத்துவிட்டாராம். ஏனென்றால் விலைமதிப்புள்ள இம்பாலா காரை அவர் அப்போது தான் வாங்கி இருக்கிறார். அதனாலேயே அவர் யாரும் அதை தொடக்கூட அனுமதிக்க மாட்டாராம். இதை தெரிந்து கொண்ட எம் ஆர் ராதா அதற்கு அடுத்து செய்த சம்பவம் தான் சுவாரஸ்யமானது.

அதாவது இந்த சம்பவம் நடந்த மூன்றே நாளில் அதே காரை அவர் வாங்கி இருக்கிறார். வாங்கியதோடு மட்டுமல்லாமல் சிவாஜி கண்ணில் படும்படியாக அந்த காரில் மாட்டுக்கு வைக்கோல், புண்ணாக்கு என ஏற்றி சென்றிருக்கிறார்.

Also read: வியாபாரத்திற்கு வந்த சிவாஜியின் அன்னை இல்லம்.. ரஜினி செய்த பெரிய உதவி

அதைப் பார்த்து அதிர்ந்து போன சிவாஜி என்ன, காரில் வைக்கோல் ஏற்றி செல்கிறீர்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு எம் ஆர் ராதா வெறும் தகரத்துக்கு கலர் கலரா பெயிண்ட் அடிச்சு வச்சா தலையிலயா தூக்கி வச்சுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் மாட்டுக்கு வைக்கோல் புண்ணாக்கு ஏற்ற வண்டி தேவைப்பட்டது. சரி இந்த இம்பாலா வண்டியில ஏத்திட்டு போப்பா என்று நான் தான் சொன்னேன் என கூறியிருக்கிறார். இந்த ஒரு சம்பவமே அவர் எவ்வளவு குசும்புக்காரர் என தெரிய வைத்திருக்கிறது. அதனாலேயே அந்த காலகட்டத்தில் பலரும் அவரிடம் கவனமாக பேசுவார்களாம்.

Also read: மன்மதனாய் விளையாடிய ரஜினியை செல்லமாய் அடித்த சிவாஜி.. பிளேபாயா 2 ஜாம்பவான்களை மிரட்டிய சூப்பர் ஸ்டார்

Trending News