பிரபல நடிகர் ஒருவர் எந்த கேரக்டர் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுத்து விடுவார். அதனாலயே இப்போது அவரை தேடி வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இப்படி பிசியாக நடித்து வரும் நடிகர் அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்தில் ரொம்பவும் கரார் பார்ட்டி.
தனக்கு ஜோடியாக நடிக்கும் அத்தனை நடிகைகளையும் வளைத்து போடும் நடிகருக்கு அந்த பெங்களூர் தக்காளி நடிகையின் மீது ரொம்ப நாட்களாகவே ஒரு கண் இருந்திருக்கிறது. அதற்கேற்றார் போல் ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்கள்.
Also read: கணவரின் குடும்பத்தால் குடி போதைக்கு அடிமையான நடிகை.. 600 படங்களில் நடித்தும் கழட்டிவிட்ட கணவர்
இதனால் குஷியான நடிகர் எப்படியாவது நடிகையை தன் ஆசைக்கு இணங்க வைத்துவிடலாம் என்று பல பிளான் போட்டு இருக்கிறார். ஆனால் அந்த நடிகையோ இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் செட் ஆகாதவர். அட்ஜஸ்ட்மென்ட் என்றாலே கோடி ரூபாய் கொடுத்தாலும் உன் படமே வேண்டாம் என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டு சென்று விடுவார்.
ஆனால் நடிகரோ எப்படியாவது அவரை படிய வைத்து விட வேண்டும் என முயற்சி செய்திருக்கிறார். இதனால் பயந்து போன தயாரிப்பாளர், நடிகரிடம் அமைதியாக இருக்கும் படி சொல்லி இருக்கிறார். வேறு வழியில்லாமல் நடிகரும் நடிகையை தொந்தரவு செய்யாமல் இருந்திருக்கிறார்.
ஆனால் அவர் படத்தில் சில நெருக்கமான காட்சிகளை வைக்கும்படி இயக்குனரிடம் கூறினாராம். நடிகையும் கதைக்கு தேவை என்பதால் அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தாராம். அந்த வகையில் தன்னிடம் வேலையை காட்ட நினைத்த நடிகரை உன் பருப்பு இங்க வேகாது என அடக்கி வைத்து எஸ்கேப் ஆகி இருக்கிறார் அந்த நடிகை.