வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பப்ளிசிட்டி பைத்தியமாக இருக்கும் நடிகரின் குடும்பம்.. சின்ன மீனை போட்டு பெரிய மீனை எடுத்த சம்பவம்

வீட்டைக் கட்டிப் பார், திருமணம் செய்து பார் என்று பழங்கால பழமொழி வழக்கத்தில் இருந்து வருகிறது. ஏனென்றால் வீடு கட்டுவது மற்றும் திருமணம் செய்வது என்பது பலருக்கு குதிரை கொம்பாக இருக்கிறது. ஆனால் வசதி உள்ளவர்கள் ஆடம்பரமாக திருமணம் செய்வதும் வழக்கத்தில் தான் இருக்கிறது.

இந்த சூழலில் நடிகர் ஒருவரின் மகள் திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது. அந்த அளவுக்கு இவர்களிடம் வசதியும் இல்லை. நடிகர் சமீபத்தில் ஒரு பிரச்சனையில் சிக்கிய நிலையில் அதிலேயே பல லட்சங்கள் வீணாக போய்விட்டது. இதனால் குடும்பம் வருத்தப்பட்டு வீடியோவும் வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து நடிகரின் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. அடுத்தடுத்த சிக்கலை சந்தித்து வந்த இவர்கள் நிதி நெருக்கடியில் சிக்கி இருநஆனால் இப்போது திருமணத்தின் மூலம் பேரம் பேசி இருக்கின்றனர்.

சமீபகாலமாக சினிமா துறையில் உள்ள பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் விரும்புவதால் இதையே வியாபாரமாக மாற்றி பல ஊடகங்கள் செய்து வருகிறார்கள்.

அவ்வாறு தான் பல ஊடகங்களில் இருந்து நடிகரின் மகள் திருமண வீடியோவை வெளியிட பல லட்சங்கள் பேசியிருந்தார்களாம். இதன் மூலம் திருமணத்திற்கு ஆன செலவை விட பல மடங்கு பணத்தை பார்த்துள்ளார் நடிகர் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Trending News