வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இறந்து போன 5 ஹீரோக்களின் கடைசி படம்.. கடைசிவரை ஒருதலை காதலனாக சுற்றி திரிந்த இதயம் முரளி

தமிழ் சினிமாவின் நடிகர்கள் வயது மூப்பு காரணமாகவோ, உடல் நிலை சரியில்லாமலும் தீடீரென இறந்துவிடுவார்கள். அவர்களின் மறைவு என்றுமே தமிழ் சினிமாவில் பேரிழப்பாகத்தான் உள்ளது. ஆனாலும் அவர்களின் திரைப்படங்களை பார்க்கும் போது அவர்களது ஞாபகங்கள் நமக்கு அவ்வப்போது வரும். அப்படி மறைந்த நடிகர்கள் நடித்த கடைசி திரைப்படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

மணிவண்ணன்: நடிகர் மணிவண்ணன் 70 காலக்கட்டத்திருந்து, 2000ஆம் காலகட்டம் வரை பல படங்களில் நடித்து அசத்தியவர். நடிப்பை தாண்டி இயக்கம், தயாரிப்பு என பன்முகத்தன்மை கொண்டவர். இதனிடையே 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதய நோய் பாதிப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு இன்று வரை தமிழ் சினிமாவிற்கு மாபெரும் இழப்பாகத்தான் உள்ளது. இதனிடையே 2013 ஆம் ஆண்டு மணிவண்ணன் தயாரித்து, இயக்கி, நடித்த நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ திரைப்படத்தில் கடைசியாக நடித்த திரைப்படமாகும். மேலும் இப்படம் மணிரத்னம் இயக்கிய 50 வது படமாகவும், அமைதிப்படை 2 என்று இப்படத்திற்கு மற்றொரு பெயரும் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கமலை ஜாதியை வைத்து பகிரங்கமாக திட்டிய மணிவண்ணன்.. ஜாக்கிரதையா இருக்கணும், அதிர்ந்த போன மேடை

விவேக்: சின்ன கலைவாணர் விவேக் பல திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், சமூக சேவையையும் செய்து வந்தார். தீடீரென 2021 ஆம் ஆண்டு மூளை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவின் பிரபலங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இதனிடையே 2022 ஆம் ஆண்டு வெளியான தி லெஜெண்ட் திரைப்படத்தில் துணை நடிகராக நடித்தார். இதுவே இவரது கடைசி திரைப்படமாகும்.

குணால்: தமிழ் சினிமாவின் ஆரம்பகால 2000 ஆம் ஆண்டுகளில் சாக்லேட் பாயாகவும்,பெண்களின் கனவு கண்ணனாகவும் வளம் வந்தவர் நடிகர் குணால். இவரது நடிப்பு அழகு என அனைத்திலும் ஹீரோ என்ற அத்தனை பொருத்தங்களையும் கொண்டவர். இதனிடையே 2008 ஆம் ஆண்டு காதல் தோல்வியால் மனம் நொந்து, தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். அவரது கடைசி தமிழ் படமாக 2007 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பனின் காதலி படமாகும்.

Also Read: விவேக்கை அவமானப்படுத்திய 2 ஹீரோக்கள்.. நான் இருக்கிறேன் என்று துணையாய் நின்ற குழந்தைகுணம் நடிகர்

முரளி: நடிகர் முரளியின் எதார்த்தமான நடிப்பை ரசிக்காதவர்களே இல்லை எனலாம். தனது திரைப்படங்களில் அவரது சாந்தமான நடிப்பை எப்போதுமே வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தவர். இதனிடையே பல வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த முரளி, தனது மகனும், நடிகருமான அதர்வாவின் பானா காத்தாடி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இதயம் படத்தில் ஒருதலை காதலனாக நடித்து பிரபலமான நடிகர் முரளி, தனது கடைசி படத்திலும் இதய முரளியாக வளம் வந்தார் .இதனிடையே 2010 ஆம் ஆண்டு இதய நோயால் பாதிப்படைந்து தனது 46 வயதில் உயிரிந்தார்.

ரகுவரன்: வில்லன் என்ற லிஸ்ட் எடுத்தால் இவரது முகம் தான் முதலில் நம்முன் வரும். 2008 ஆம் ஆண்டு தனது 49 ஆவது வயதில் உடல் உறுப்பு செயலிழந்த காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமாவிற்கே பேரதிர்ச்சியாக இன்று வரை உள்ளது. இதனிடையே 2008 ஆம் ஆண்டு எல்லாம் அவன் செயல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதுவே இவரது கடைசி படமாகும்.

Also Read: முரளியால் ஏற்பட்ட பல கோடி நஷ்டம்.. 30 வருட நட்பால் சினிமாவை வெறுத்து ஒதுங்கிய இயக்குனர்

Trending News