வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இயக்குனரை நம்பி மோசம் போன நடிகர்.. மனைவியிடம் வசமாக சிக்கி படும் பாடு

வெளிச்ச நடிகர் இப்போது அந்த பெண் இயக்குனர் மேல் ரொம்பவும் கோபத்தில் இருக்கிறாராம். சமீபத்தில் கூட இவர்களுக்குள் பிரச்சனை என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

அதேபோல் இருவரும் இணையும் படம் ட்ராப் ஆக கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அப்படி என்னதான் பிரச்சனை என்று விசாரித்ததில் பல விஷயங்கள் சிக்கியிருக்கிறது.

நடிகர் தனக்கு பெரும் வெற்றியை கொடுத்த அந்த இயக்குனரின் மேல் நல்ல மரியாதை வைத்திருக்கிறார். அதனாலேயே அவர் சொன்ன நடிகரை வைத்து படம் எடுக்கவும் அவர் சம்மதித்தார்.

ஆனால் நடிகரின் மனைவிக்கோ வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க ஆசை இருந்திருக்கிறது. இருந்தாலும் நடிகர் பொண்டாட்டி பேச்சை கேட்காமல் அந்த ப்ராஜெக்ட்டுக்கு காசைக்கொட்டி இருக்கிறார்.

ஆனால் இப்போது முதலுக்கே மோசம் என்ற நிலையில் இருக்கிறதாம். ஏற்கனவே அந்த ஹீரோவை வைத்து படம் எடுத்தவர்கள் தலையில் துண்டை போட்டு நொந்து போய் இருக்கின்றனர்.

அந்த லிஸ்டில் நடிகரும் சேர்ந்து விடுவார் என வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது. இதையெல்லாம் பார்த்த நடிகரின் மனைவி அவரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார்.

இதுதான் நடிகருக்கும் இயக்குனருக்கும் பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க படம் வெளிவந்து போட்ட காசை எடுத்து விட வேண்டும் என்பதிலும் நடிகர் தீவிரமாக இருக்கிறாராம்.

Trending News