சனிக்கிழமை, மார்ச் 15, 2025

கல்யாணத்துக்கு ரெடியாகும் நடிகரின் மனைவி.. பிடிவாதமாக சாதித்துக் காட்டிய மாமியார்

Gossip: அந்த பிரபல நடிகர் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். அவரைப் பற்றி எந்த கிசுகிசுவும் இதுவரை வந்தது கிடையாது.

ஆனால் திடீரென அவர் தன் மனைவியை பிரிந்தது அனைவருக்கும் அதிர்ச்சி தான். இது பெரும் பூகம்பத்தை கிளப்பியது. மனைவி தரப்பிலிருந்து நடிகர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்.

நடிகரை மீடியாக்கள் சுற்றி வளைத்தது. அதன் பிறகு தான் நடிகர் அப்பாவி என தெரிய வந்தது. தற்போது நடிகர் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பிடிவாதமாக சாதித்துக் காட்டிய மாமியார்

விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த சூழலில் நடிகரின் மனைவி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக செய்திகள் கசிந்து உள்ளது.

விவாகரத்து முடிந்த பிறகு உடனே மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என நடிகரின் மாமியார் பிடிவாதமாக இருந்திருக்கிறார். அதனால் விரைவில் திருமண சேதி வரும் என்கின்றனர்.

மாப்பிள்ளை வேறு யாரும் கிடையாது. பக்கத்து மாநில பிரபலம் தான். குடும்ப நண்பர்கள் என்பதால் இருதரப்பும் ஒன்று கூடி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்களாம்.

ஆனால் நடிகருக்கு இதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. எப்படியாவது விவாகரத்து வாங்கி விட்டு நிம்மதியாக தன் வேலையை பார்த்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறாராம்.

Trending News