புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பட்டதும் புத்தி தெளிந்த நடிகை.. இயக்குனருக்கு போட்ட பெரிய கும்பிடு

Gossip: அந்த உயர்ந்த நடிகை வந்த வேகத்திலேயே அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். படம் வெற்றியோ தோல்வியோ ஆனால் நடிகையின் கையில் ஏகப்பட்ட படங்கள் இருந்தது.

அதிலும் அந்த கோபக்கார இயக்குனரின் படத்தில் அவர் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இப்போது பார்த்தால் நடிகை அவருக்கு பெரிய கும்பிடாக போட்டு விட்டாராம்.

சமீபத்தில் இயக்குனரின் படத்தில் நடிகைக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இயக்குனர் இன்னும் பழைய பாணியிலேயே உருட்டியதில் படம் சொதப்பிவிட்டது.

இயக்குனருக்கு கும்பிடு போட்ட நடிகை

அதனால் வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டும் காணாமல் போனது. தற்போது டிஜிட்டலுக்கு வந்தும் கூட அந்த படத்தை ரசிகர்கள் ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர்.

அதில் நடிகையும் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் இயக்குனர் போன் செய்தால் கூட நடிகையின் நம்பர் நாட் ரீச்சபிள் என்றுதான் வருகிறதாம்.

மேலும் நடிகை படத்தின் பிரமோஷனுக்கு வராதது கூட இந்த மன வருத்தத்தால் தான் என்கின்றனர். அதனாலேயே இயக்குனர் அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற போது கூட நடிகை ஆளை விடு சாமி என்று எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

சமீபத்திய கிசுகிசுக்கள்

Trending News