சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

எம்ஜிஆர் உடன் அதிக முறை ஜோடி போட்ட ஒரே நடிகை.. மொத்தமாக நடித்த 85 படங்களில் 80 படம் ஹிட்

சினிமாவில் டாப் நடிகர்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் அதிக சில்வர் ஜூப்ளி அவார்டுகளை தன் வசம் வைத்திருக்கிறார் ஒரு நடிகை. இவர் நடித்த 85 படங்களில் 80 படங்கள் ஹிட். அதுமட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் 28 படங்கள் ஹிட் கொடுத்து அங்கேயும் பல சில்வர் ஜூப்ளி அவார்டுகளை தன்வசம் வைத்திருக்கிறார்

தன்னுடைய நேர்த்தியான நடிப்பிலும் யாரிடமும் இன்று வரை அடிபணியாமல் ஒரு ராஜ்ஜியத்தை நடத்தியவர் அந்த நடிகை. எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் நடிகையாக வலம் வந்தவர் ஜெயலலிதா. இவருக்கு என்று ஒரு தனி சிறப்பான நடிப்பு உண்டு. அதன் மூலம் பல ரசிகர்களை சந்தோசமாக வைத்துள்ளார். தனக்கே உரித்தான திமிரில் நடித்து பல படங்களை வெற்றி பெற செய்தார்.

Also Read: தனக்கே உண்டான திமிரில் நடித்து கலக்கிய ஜெயலலிதாவின் 6 படங்கள்.. சிவாஜியை மிரள விட்ட தலைவி

அதிலும் எம்ஜிஆர் உடன் நிறைய படங்களில் ஜோடி சேர்ந்து, அவரின் லக்கி நடிகையாகவே மாறினார். அதன் பின் அரசியலில் இறங்கி பல நன்மைகளை செய்தவர் செல்வி ஜெ ஜெயலலிதா. இவர் மேடை ஏறும் ஒவ்வொரு முறையும் ‘மக்களால் நான். மக்களுக்காக நான்’ என்ற தாரக மந்திரத்தை கணீர் குரலின் மூலம் சொல்லி, தன்னுடைய பேச்சை ஆரம்பிப்பார். இன்று அவருடைய 75 ஆவது பிறந்த நாளை திரை பிரபலங்களும் ரசிகர்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

ஆண்டுகள் போனாலும், ஆட்சிகள் மாறினாலும், கட்சிகளின் கொள்கைகளும் மாறினாலும் ஜெயலலிதா மட்டும் இப்போது இருந்திருந்தால்! என்ற வார்த்தைகளில் இன்றும் ரசிகர்களிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் கொண்டு வந்த எண்ணற்ற சமூக நலத்திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது.

Also Read: கிளாமரான பாடலுக்கு பிள்ளையார் சுழி போட்ட எம்ஜிஆரின் 5 படங்கள்.. பட்டையை கிளப்பிய உலகம் சுற்றும் வாலிபன்

பிறக்கும்போது பெரிய புகழ் எதுவும் இல்லாவிட்டாலும், இறந்த பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படிப்பட்ட தலைவியை இனி ஒரு காலமும் பார்க்க முடியாது என்று நினைக்கும் அளவுக்கு தனது திறமையால் உயர்ந்தவர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல, ‘பணிந்து நின்று தான் பணி செய்ய வேண்டும் என்பதில்லை. துணிந்து நின்று பணி செய்யலாம்’ என்பதை நிரூபித்த பெண் ஆளுமையை இன்று வரை பலரும் உதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.

இவர் அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் அதிக படங்களுக்கு சில்வர் ஜூப்ளி அவார்டை வாங்கி குவித்திருக்கும் ஒரே நடிகை என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் சோடை போகாமல் ஹிட் கொடுத்ததால் கதை தேர்வு, எப்படி நடிப்பது போன்றவற்றிற்கெல்லாம் இளம் நடிகைகளுக்கு முன்னுதாரணமாக ஜெயலலிதா இப்போது வரை இருக்கிறார்.

Also Read: எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்பே சினிமாவை ஆட்சி செய்த 2 ஜாம்பவான்கள்.. 70-களில் கலக்கிய சூப்பர் ஹீரோஸ்

- Advertisement -spot_img

Trending News