வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

காதல் தோல்வி, தற்கொலை முயற்சியில் வாரிசு நடிகை.. 37 வயதாகியும் திருமணத்தை வெறுக்கும் சோகம்

காதல், பிரேக் அப், விவாகரத்து என்பதெல்லாம் இப்போதைய காலகட்டத்தில் மிகவும் சகஜமாக இருக்கிறது. அதிலும் சினிமா துறையில் இரண்டு, மூன்று முறை பிரேக் அப் செய்த நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தன் காதல் தோல்வியில் முடிந்ததால் இன்றுவரை திருமணமே வேண்டாம் என்று தனிமையில் வாழும் ஒரு நடிகையும் இருக்கிறார்.

இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால் விவாகரத்து முடிந்த வேகத்திலேயே இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் நடிகர், நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பிரபல நட்சத்திர தம்பதிகளின் மகள் 37 வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விதான்.

Also read : நடிகரின் முகத்திரையை கிழித்த முன்னாள் காதலி.. சைக்கோவை விட மோசமாக நடந்து கொண்ட கொடுமை

தன் அப்பாவின் இயக்கத்தில் அறிமுகமான அந்த நடிகை ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார். பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை திடீரென தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வந்தது.

ஆனால் நடிகைக்கு உடல்நல பிரச்சனை தான் என்று இயக்குனர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் நடிகை அறிமுகமான படத்தில் நடித்த அந்த மலையாள நடிகருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.

Also read : புருஷனால் நடிகைக்கு பிடித்த பைத்தியம்.. விபரீதமான முடிவு எடுத்த 80ஸ் கனவுக்கன்னி

இது ஒரு புறம் இருக்க நடிகை வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை காதலித்து தோல்வி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் அந்த வாரிசு நடிகைக்கு ஏற்பட்ட காதல் தோல்வி அவரை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கி இருக்கிறது.

இதனால் தான் அந்த நடிகையின் தம்பிக்கு திருமணம் முடிந்தும் கூட இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவரின் அம்மா, அப்பா எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் கூட தன் முடிந்து போன காதலை மறக்க முடியாமல் அவர் இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.

இப்போது வரை திருமணத்தை வெறுக்கும் அவர் பொது இடங்களில் கூட அவ்வளவாக தென்படுவது இல்லை. இது அந்த நட்சத்திர தம்பதிகளுக்கு பெரிய வேதனையை கொடுத்தாலும் மகளின் சந்தோஷம் முக்கியம் என்று ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

Also read : கிசுகிசுவால் கேரியரை தொலைத்த அக்ரகாரத்து நடிகை.. பல வருடம் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Trending News