வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இருட்டில் சேரலாம், வெளிச்சத்துக்கெல்லாம் ஆசைப்படாதே.. நடிகை கல்யாணம் என்றவுடன் கம்பி நீட்டிய அரசியல்வாதி

நடிகை குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி சினிமாவில் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றார். அவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அந்த காலம் முதல் இக்கால நடிகர்கள் வரை அனைவரது படத்திலும் நடித்து விட்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

ஆனால் சமீப காலமாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் உச்ச நடிகையாக இருந்தபோது சொத்துக்கள் நிறைய வாங்கி குவித்து வந்தார். அந்தச் சமயத்தில் சென்னையில் முக்கிய இடத்தில் நிலம் வாங்கி இருந்தார். அப்போது சிறிய கட்சி தலைவர் ஒருவர் பிரச்சனை செய்திருக்கிறார்.

Also Read : மனைவி இருக்கும் போதே நடிகைக்கு தாலி கட்டிய வாரிசு நடிகர்.. நான்கே மாதத்தில் முடிவு கட்டிய அப்பா!

சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்து வந்துள்ளார். அப்போதுதான் அவரின் நெருங்கிய வட்டாரம் இந்த கட்சி தலைவரை சந்திக்குமாறு கூறியுள்ளனர். உடனடியாக அவரை சந்தித்து இந்தப் பிரச்சினையை மட்டும் சரி செய்தால் என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறியுள்ளார் நடிகை.

அந்தப் பிரச்சனையை உடனடியாகவே அரசியல்வாதி சரி செய்து விட்டார். இதனால் நடிகையும் அவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டனர். மேலும் அரசியலில் பெரும்புள்ளியாக இவர் இருப்பதால் நடிகை அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இருக்கிறார். இது பற்றி அவரிடமும் பேசி இருக்கிறார்.

ஆனால் அரசியல்வாதியோ இருட்டில் நாம் சேர்ந்து கொள்ளலாம், வெளிச்சத்திற்கெல்லாம் ஆசைப்படாதே என கூறிவிட்டாராம். ஏனென்றால் நடிகையை திருமணம் செய்து கொண்டால் அரசியல் நடத்த முடியாது என யோசித்து அரசியல்வாதி கல்யாணம் என்ற உடன் கம்பி நீட்டிவிட்டார்.

Also Read : கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் முத்தக் காட்சியில் அதிக நெருக்கம் காட்டிய நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

Trending News