சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

சப்தமே இல்லாமல் மொத்த ஹீரோயினிக்கும் வைத்த ஆப்பு.. நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய நடிகை

தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட நடிகை நயன்தாராவிற்கு, இப்பொழுது சினிமாவில் டல் டைம் என்று சொல்லலாம். இவர் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு தன்னுடைய கெரியருக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என, நான்கே மாதத்தில் வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானார். இருப்பினும் நயன்தாராவிற்கு சமீபத்தில் நடித்த படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை என்று கூறலாம். கல்யாணமானதிலிருந்து அவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கும் நேரம் சரியில்லை போல் தெரிகிறது.

Also Read: நயன், அனுஷ்கா எல்லாம் காட்டுனா காட்டட்டும்.. அஜித் படத்தை தூக்கி எறிந்த அசினின் மிரட்டும் போட்டோ ஷூட் புகைப்படங்கள்

இந்நிலையில் நயன்தாராவை புக் செய்த தயாரிப்பாளர்கள் எல்லாரும் வேறு ஒரு கதாநாயகியை அணுகுகிறார்கள். பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதைக்கு இவர் பொருந்துகிறார் என்று அவரிடம் சரண் அடைகின்றனர். பல கோடி சம்பளம் கேட்கும் நயன்தாராவை விட இந்த நடிகை சில கோடிகள் மட்டுமே சம்பளமாக வாங்குகிறார்.

இதனால் படத்தின் பட்ஜெட்டும் எகிறாது என்பதால், தயாரிப்பாளர்களின் சாய்ஸ் இவராக உள்ளார். சமீப காலமாகவே லேடி சூப்பர் ஸ்டாரை அப்படியே பின்பற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அசத்தி வருகிறார். படங்களும் சூப்பர் ஹிட் ஆகிறது.

Also Read: என் கேரியரை வளர விடாமல் தடுத்த நயன்தாரா.. ரஜினியுடன் நடிக்க இருந்த வாய்ப்பை நழுவ விட்ட நடிகை

சமீபத்தில் இவர் நடித்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம் சக்கை போடு போட்டது. இவருடைய நடிப்பில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக இருக்கும் ‘சொப்பன சுந்தரி’ திரைப்படமும் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. படம் காமெடி ஜோனரில் உருவாகி உள்ளது.

இவ்வாறு சத்தமே இல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை வாரிக் குவித்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், மொத்த ஹீரோயின்களுக்குமே ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கொஞ்சம் கொஞ்சமாக மாறி நயன்தாராவை பின்னுக்கு தள்ளுகிறார்.

Also Read: தமிழ் புத்தாண்டை குறிவைத்து ரிலீஸ் ஆகும் 5 படங்கள்.. பிச்சைக்காரன் 2-வை டீலில் விட்ட விஜய் ஆண்டனி

Trending News