வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடியாக நடிக்க யோசிக்கும் நடிகை.. நயன்தாரா கூட இவ்வளவு பில்டப் காட்டல

வெறும் 5 கோடி பட்ஜெட்டில் லவ் டுடே படத்தை இயக்கி நடித்ததன் மூலம் 100 கோடி வசூலை அசால்டாக தட்டி தூக்கி சாதனை படைத்திருக்கிறார் பிரதிப் ரங்கநாதன். அடுத்ததாக இவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

ஏனென்றால் லைக்கா தயாரிப்பில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவனை ஓரம் கட்டியதால், தற்போது ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். அதற்காக தயார் செய்த கதையில் பிரதீப் ரங்க நாதனை வைத்து ஹிட் கொடுக்கப் பார்க்கிறார். இப்படிப்பட்ட சூழலில் பிரதீப் ரங்கநாதனுடன் நடிக்க மாட்டேன் என வளரும் நடிகை சொல்லி இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பழசை மறந்த விக்னேஷ் சிவன்.. அஜித்துக்கு ஆறுதல் சொல்லி போட்ட பதிவு

ஏனென்றால் நயன்தாரா கூட பிரதீப்புடன் நடிப்பதற்கு இவ்வளவு பில்டப் காட்டவில்லை. ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் அந்த நடிகை நயன்தாராவை விட ஓவர் திமிரு காட்டுகிறார். தமிழ் சினிமாவிற்கு பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானார். இதில் அவர் நடிக்க முதலில் ஒத்துக் கொள்ளவில்லை.

பின் கார்த்தி எந்த கிசுகிசுப்புகளும் இல்லாதவர் என்ற காரணத்தால், நடிக்க சரி என்று சொன்னார். அதேபோல் அடுத்ததாக மாவீரன் படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனும் மிகப்பெரிய அளவில் கிசுகிசுப்புகளில் சிக்கவில்லை. அதனால் பயமில்லாமல் ஒத்துக் கொண்டார்.

Also Read: லோகேஷுக்கு ஸ்கெட்ச் போட்ட சிம்பு.. பத்து தல செய்தியாளர் சந்திப்பில் வீசிய வலை

அதன் பிறகு சர்ச்சைகளுக்கு பெயர் போன சிம்பு நடிக்கும் கொரோனா குமார் படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க ஒப்புக்கொண்டார். இதுவரை சிம்புவுடன் நடித்த எந்த நடிகைகளையும் அவருடன் சேர்த்து வைத்து பேசாமல் இருந்ததில்லை. அப்படி இருக்கும்போது இவருடன் நடிக்க ஒத்துக் கொள்ள காரணம் கிசுகிசுப்பின் மூலம் தான் சீக்கிரமாகவே பாப்புலராக முடியும் என்பதை அதிதி ஷங்கர் புரிந்து கொண்டார்.

ஆனால் சிம்புவுடன் நடிக்க கூடாது என ஷங்கர் தெரிவித்தும், முடியாது என்று அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் கடைசியில் நடந்தது வேறு. அந்த படத்தில் இருந்து சிம்பு விலகியதால் தற்போது அதில் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு இப்போது பிரதீப் ரங்கநாதனுக்கு வந்திருக்கிறது.

Also Read: எக்ஸை திரும்ப காட்டி கதி கலங்க செய்த 5 படங்கள்.. மனதை கனக்க செய்த கார்த்திக் ஜெஸி காதல்

என்னதான் ஒரு படம் வெற்றி அடைந்தாலும் இவருடன் நான் நடிப்பதா! என்று யோசித்து வருகிறார் அதிதி ஷங்கர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட இவ்வளவு தயக்கம் காட்டவில்லை, வளரும் நடிகை அதிதி சங்கர் ஓவர் பில்டப் காட்டுகிறாரே என பெரிதும் விமர்சிக்கப்படுகிறார்.

Trending News