திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் விஜய்யின் படம் கிடைக்கும்.. பகிரங்கமாக பேட்டியளித்த நடிகை

Tamil Actress: சமீப காலமாகவே அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயம் தான் நடிகைகளை படாத பாடுபடுத்திக் கொண்டிருக்கிறது. என்னதான் நடிகைகளுக்கு அழகும் திறமையும் இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே டாப் நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்கும் என்று பல நடிகைகள் பேட்டிகளில் போட்டுடைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார் இவர்களின் வரிசையில் இப்போது பல பிரபலங்களுக்கு தங்கையாக நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகை பாலாம்பிகாவும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து அவிழ்த்துவிட்டு இருக்கிறார். இவர் பிரபல இயக்குனர் கேஎஸ் கோபால கிருஷ்ணனின் உதவியாளராக இருந்த ராமசாமி என்பவரின் மகள்.

Also Read: மாஸ் என்ட்ரியால் கதி கலங்கும் பெரும்புள்ளிகள்.. நியூ லுக்கில் நீலாங்கரையை வட்டமிட்ட தளபதி விஜய்

இதனால் சினிமாவில் வெகு சீக்கிரமே நுழைந்த பாலாம்பிகை ‘பாலம்’ என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து அறிமுகமானார். அதன் பிறகு ‘நடிகன்’ படத்தில் குஷ்புவுக்கு தங்கையாகவும், ‘பாட்டுக்கு ஒரு தலைவன்’ என்ற படத்தில் கேப்டனுக்கு தங்கையாகவும், அதன் பின் ‘திருமதி பழனிச்சாமி’ என்ற படத்தில் சத்யராஜுக்கு தங்கையாகவும் நடித்து செம பேமஸ் ஆனார்.

இருப்பினும் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தார். ஆனால் மறுபக்கம் அவருக்கு விஜய், அஜித், கமல், பிரசாந்த் உள்ளிட்டோர்களின் படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டுதான் இருந்ததாம். அந்தப் பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவியது.

Also Read: திருந்தாத விஜய், திருந்தாத அரசியல்வாதிகள்.. தெரிந்தும் மீண்டும் மீண்டும் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் தளபதி.!

இதில் பாலாம்பிகாவின் தந்தைக்கு சுத்தமாகவே விருப்பமில்லை. ‘அப்படி ஒன்னும் நீ நடிக்க வேண்டாம்’ என்று அந்த படங்களுக்கு எல்லாம் நோ சொல்லிவிட்டாராம். ஒருவேளை அட்ஜஸ்ட்மெண்ட் கேட்காமல் அந்த பட வாய்ப்பு தன்னை தேடி வந்திருந்தால் இப்போது முன்னணி நடிகையாக மாறி இருப்பேன் என்று பாலாம்பிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் புலம்புகிறார். இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி சீரியலில் நடிக்க தொடங்கினார். முன்னணி சீரியல்களான நாதஸ்வரம், பிரியமானவள் உள்ளிட்ட தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இவருடைய திருமண வாழ்க்கை சரியாக அமையாமல் போய்விட்டதாம். தினமும் குடிக்கக்கூடிய கணவர் ஒருநாள் தன்னுடைய மகளையே டாஸ்மார்க் கடைக்கு அனுப்பி மது பாட்டிலை வாங்கிட்டு வர சொல்லி இருக்கிறார். அன்று கணவரைப் பிரிந்து தனித்து வாழ முடிவெடுத்த பாலாம்பிகா, தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக சீரியலில் நடிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்.

Also Read: சர்ச்சையில் சிக்கிய லியோ போஸ்டர்.. அரசியலுக்கு வர நேரத்தில் இப்படியா?

அதுவும் கொரோனா காலகட்டத்தில் ரொம்பவும் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்ட பாலாம்பிகை, சத்யராஜுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனக்கு உதவும் படி கேட்டு இருக்கிறார். அவரும் ரூபாய் 20,000 பணம் கொடுத்து உதவியுள்ளார். அதேபோல விஜயகாந்த்தை பாலாம்பிகை தொடர்பு கொள்ள நினைத்திருக்கிறார். ஆனால் அது முடியாமல் போனதாம். இவ்வாறு சினிமாவில் திறமை இருந்தும் சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட்செய்யாத காரணத்தால் ஒதுக்கப்பட்டிருக்கும் அவலமும் நிகழ்ந்துள்ளது.

பகிரங்கமாக பேட்டியளித்த நடிகை பாலாம்பிகா

actress-balambika-1-cinemapettai
actress-balambika-1-cinemapettai

Trending News