ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

15 வயதிலேயே நடந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை.. தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிவந்த நடிகை

அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை இப்போது எல்லா துறைகளிலும் கேட்க முடிகிறது. ஆனாலும் திரையுலகை பொருத்தவரை இப்போது இது வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் திரை மறைவில் இது போன்ற டார்ச்சர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படித்தான் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலம் 15 வயதிலேயே ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படம் வந்த வேகத்திலேயே காணாமல் போனது. இருந்தாலும் அந்த நடிகைக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்திருக்கிறது.

Also read: பட வாய்ப்பு கொடுத்துட்டு படுக்கைக்கும் கூப்பிடுவாங்க.. அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை பற்றி பேசிய ஐட்டம் நடிகை

அதில் பிரபல ஹீரோ ஒருவரின் படத்தில் நடிக்க அந்த நடிகையை படகுழு அணுகி இருக்கிறது. சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் பேசிவிட்டு இறுதியில் அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். உடனே நடிகையின் அம்மா கால்ஷூட் அட்ஜஸ்ட்மென்ட் என நினைத்துக் கொண்டு சரி என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தான் அவர்கள் எந்த மாதிரியான விஷயத்தை பேசி இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு புரிய வந்ததாம். உடனே பதறிப்போன நடிகையின் அம்மா இதெல்லாம் எங்களுக்கு பழக்கமில்லை. நாங்கள் அப்படிப்பட்டவர்கள் கிடையாது என்று சொல்லி மறுத்திருக்கிறார்.

Also read: அத்துமீறி கண்ட இடத்தில் கை வைத்த நடிகர்.. பளார் என்று அரைவிட்ட நடிகை

இதனால் அந்த பட வாய்ப்பும் கைநழுவி போயிருக்கிறது. இருந்தாலும் மானம் தான் பெருசு என அந்த நடிகை தப்பித்தோம் பிழைத்தோம் என வெள்ளி திரையை விட்டே எஸ்கேப் ஆகிவிட்டார். அதன் பிறகு சின்ன திரையில் என்ட்ரி கொடுத்த அவர் இப்போது குடும்பம் குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார்.

Trending News