திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

பணத்தாசை காட்டி இளம் நடிகைகளை மயக்கும் ஆன்ட்டி நடிகை.. சினிமா ஆசையால் வலையில் சிக்கும் மீன்கள்

சோசியல் மீடியாக்கள் எப்பொழுது அதிகமாக ஆரம்பித்ததோ அப்போதே பல பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. அதிலும் மீடியாவில் இருக்கும் பெண்கள் இதனால் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வரும் ஒரு ஆன்ட்டி நடிகை தற்போது சோசியல் மீடியாவில் இருக்கும் இளம் நடிகைகளை டார்கெட் செய்து வருகிறாராம்.

சினிமாவில் நடித்து சம்பாதிக்க வேண்டும் என்று பல நடிகைகளும் சோசியல் மீடியாவில் தங்கள் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர். அதேபோன்று 40 வயதை தாண்டிய அந்த நடிகையும் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் பல கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

அப்படியும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் அப்செட் ஆன நடிகை அந்த போட்டோக்களை வைத்து பிசினஸ் செய்ய ஆரம்பித்து விட்டார். இதற்காகவே தனி ஆப் ஒன்றை ஆரம்பித்து கிளாமர் போட்டோ, வீடியோ சாட் என்று ஒவ்வொன்றுக்கும் ரேட் பேசி அவர் கல்லா கட்ட ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த பிசினஸ் தற்போது டல்லடிக்க ஆரம்பித்து விட்டதாம். இதனால் யோசித்த நடிகை தற்போது தன் பார்வையை இளம் நடிகைகளின் பக்கம் திருப்பி இருக்கிறார். சினிமா வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வரும் சீரியல் நடிகைகளையும், வளர்ந்து வரும் நாயகிகளையும் அவர் இந்த பிசினஸில் இழுத்து விட முயற்சி செய்து வருகிறாராம்.

எக்கச்சக்கமாக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் அந்த நடிகைகளும் அவருடைய வலையில் சிக்கி வருகிறார்கள். இதை வைத்தே அந்த ஆன்ட்டி நடிகை வீடியோ சாட் செய்வதற்கு லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வருவதாகவும், விரைவில் இளம் நடிகைகளின் புகைப்படங்கள் அந்த தளத்தில் வெளியாகும் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

பணத்திற்காக நடிகை தான் கெட்டது மட்டுமின்றி இளம் நடிகைகளையும் இப்படி புதை குழியில் தள்ளிவிட்டு இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இப்படிப்பட்ட கேவலமான வேலையை செய்யலாமா என்று நடிகையை ரசிகர்கள் கண்டபடி திட்டி தீர்க்கின்றனர்.

Trending News