சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

திருமணமான 15 நாளிலேயே காணாமல் போன கணவன்.. 15 வருடங்களாக எதையும் அனுபவிக்காமல் காத்திருக்கும் 49 வயது நடிகை

சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டால் நடிகைகள் பலரும் வெளிநாட்டு தொழிலதிபதராக பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார்கள். அப்படித்தான் 80களில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த ஒருவரை திருமணம் செய்திருக்கிறார்.

ஆனால் 15 நாட்கள் மட்டுமே அவர் தன் கணவருடன் வாழ்ந்து இருக்கிறார். அதன் பிறகு அவர் திடீரென காணாமல் போய்விட்டதாகவும் அவரை தேடிக் கொண்டிருக்கிறேன் என அந்த நடிகை பல வருடங்களாக கூறி வருகிறார். ஆனால் தன் கணவரை பற்றிய விவரமோ திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களோ இல்லை என்றும் குழப்புகிறார் அந்த நடிகை.

Also read: ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

இதனால் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதாக திரையுலகில் ஒரு பரபரப்பு பேச்சு எழுந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் அந்த நடிகையின் அப்பாவே அவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவர் மன அழுத்தத்தால் தனக்கென ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். அதை திட்டவட்டமாக மறுத்த நடிகை இப்போது வரை கணவருக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம்.

அது மட்டும் இல்லாமல் அவர் தன்னுடைய சொத்துக்களை உறவினர்கள், பகைவர்கள் யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக பல வருடங்களாக வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறாராம். இப்படி வித்தியாசமாக நடந்து கொள்ளும் அந்த நடிகையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூட அவ்வளவாக பார்த்தது கிடையாதாம்.

அந்த அளவுக்கு நடிகை யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் கனவு உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்த இந்த நடிகையின் தற்போதைய நிலைமை பலருக்கும் கண்ணீரை தான் வரவழைக்கிறது. இதற்கு நடிகர் சங்கம் ஏதாவது ஒரு தீர்வை தர வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read: வெளியில் தான் ஹீரோ, வீட்டுக்குள்ள ஜீரோ.. நடிகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி

Trending News