செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025

கூட்டத்தோடு கூட்டமா நடிக்க வைத்த இயக்குனர்.. ஹீரோயின்னு நம்பி ஏமாந்த நடிகை

Gossip: தமிழில் வெற்றி நடிகரின் படத்தில் தான் அந்த நடிகை முதலில் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்.

அப்படிப்பட்டவர் ரேஸ் நடிகரின் படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்தது அனைவருக்கும் ஆச்சர்யம் தான். வாய்ப்பு கிடைக்காததால் இப்படி ஒரு முடிவுக்கு அவர் வந்துவிட்டார் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் அந்த படத்தில் நடித்தது தான் என நடிகை தற்போது ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார்.

ஹீரோயின்னு நம்பி ஏமாந்த நடிகை

அந்த படத்தில் நடிக்க கமிட் ஆன போது ஹீரோவுக்கு ஜோடி என கூறியிருக்கிறார்கள். முதல் ஹீரோயின் இறந்து விடுவார் அதன் பிறகு நீங்கள் தான் ஜோடி என சொல்லி இருக்கின்றனர்.

நடிகையும் பெரிய ஹீரோவுக்கு ஜோடி என சந்தோஷமாக அதில் நடிக்க சம்மதித்திருக்கிறார். அதன் பிறகு தான் தெரிந்திருக்கிறது பட குழு சொன்னது மொத்தமும் பொய் என்று.

இப்படி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார்களே என ஆதங்கத்துடன் அந்த படத்தில் நடித்தும் கொடுத்தார் நடிகை. ஆனால் அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தன்னுடைய சினிமா வாழ்வே போச்சு என இப்போது குமுறி வருகிறார்.

Trending News