
Serial: வெள்ளிதிரையில் நடிக்கும் படங்களை விட சின்னதிரை சீரியல் மூலம் ஆர்டிஸ்ட்கள் மக்களிடம் ஈசியாக பிரபலமாக முடியும். தினமும் வீட்டில் இருந்தபடியே சீரியலை பார்ப்பதால் அவர்களுக்கு என்று தனி வரவேற்பு கிடைக்கும். அப்படி சீரியல் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் ரேஷ்மா. இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.
இந்த சீரியலின் கதை மட்டும் இல்லாமல் ரேஷ்மாவின் நடிப்பும் மக்களை கவர்ந்தது. அதனால் கிட்டத்தட்ட நான்கு வருடமாக இந்த சீரியல் வெற்றி நடை போட்டு வந்தது. இதனை தொடர்ந்து அபி டெய்லர் என்ற சீரியலில் கணவருடன் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால் விஜய் டிவி சேனலுக்கு தாவினார். ஆனால் அங்கே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காததால் அந்த சீரியலை முடித்துவிட்டு கிழக்கு வாசல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த சீரியலும் சில பல காரணங்களாக கதையை கொண்டு போக முடியாததால் அவசர அவசரமாக முடித்து விட்டார்கள். இதனை அடுத்து மறுபடியும் ஜீ தமிழுக்கு தாவிய ரேஷ்மா, நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற சீரியலில் நடித்து மக்களை கவர்ந்தார். ஆனால் அதுவும் ரேஷ்மாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக ஆகிவிட்டது. அதாவது ஹீரோ பாதியிலேயே விலகியதால் நாடகத்தையே முடித்து விட்டார்கள்.
இதனால் போன இடத்தில் எல்லாம் ஏமாற்றம் அடைந்த ரேஷ்மாவுக்கு தற்போது முதல் முறையாக சன் டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் பிரேம் டைமில் இந்த சீரியல் ஒளிபரப்பாக போகிறது. பூவே செம்பூவே என்ற சீரியல் மூலம் ரேஷ்மா என்ட்ரி கொடுக்கப் போகிறார். இதற்கு ஜோடியாக சன் டிவியில் சுந்தரி சீரியலில் வில்லன் மற்றும் ஹீரோவாக நடித்த ஜஷ்னு என்கிற கார்த்திக் தான் கமிட் ஆகியிருக்கிறார். இந்த சீரியலாவது நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறார்.