Gossip: திருமணம் ஆனாலும் கூட நம்பர் நடிகையின் கெத்து குறையவில்லை. கல்யாணத்திற்கு பிறகு சில தோல்விகளை சந்தித்த நடிகை இப்போது ஃபுல் ஃபார்மில் இறங்கிவிட்டார்.
கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் மறுக்காமல் ஓகே சொல்லி விடுகிறாராம். அதிலும் வளர்ந்து வரும் ஹீரோவுடன் இவர் நடிப்பதுதான் ஆச்சரியத்தை கிளப்பி இருக்கிறது. டிவி நடிகருக்கு போட்டியாக முன்னேறிக் கொண்டிருக்கும் இளம் ஹீரோ அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார்.
சமீபத்தில் நம்பர் நடிகையுடன் அவர் நடிக்க இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அக்கா தம்பி போல் இருக்கும் இவர்கள் எப்படி ஜோடியாக நடிக்க முடியும் என்றும் பேசி வருகின்றனர். ஆனால் நம்பர் நடிகையோ ரொம்பவும் கூலாக நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.
நம்பர் நடிகையின் சாமர்த்தியம்
இந்த அதிர்ச்சி குறையாத நிலையில் இரண்டெழுத்து டாப் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கவும் நடிகை சம்மதித்துள்ளார். பிரம்மாண்ட படம் மூலம் பான் இந்தியா நடிகராக வளர்ந்த அந்த ஹீரோ தற்போது பிரபல இயக்குனருடன் கைகோர்த்துள்ளார்.
அந்த படத்தில் அவருக்கு அக்காவாக நடிக்க நம்பர் நடிகையை புக் செய்து இருக்கின்றனர். இதற்காக சில பல கோடிகள் அதிகமாக சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். பிசினஸ் ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் என நடிகை கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அதில் முடிந்தவரை இப்போதே கல்லாவை நிரப்பி கொள்ள வேண்டும் என தீயாக வேலை பார்த்து வருகிறார். அதன் பலனாக தற்போது அவர் கைவசம் ஒரு டஜன் படங்கள் இருக்கிறது.
கை நிறைய படங்களை அள்ளும் நடிகை
- பிகினி ரேஞ்சுக்கு இறங்கியும் பிரயோஜனம் இல்ல
- திருமணமான நடிகரை வசியம் செய்ய பார்த்த சேச்சி
- சூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் ஆர்ப்பாட்டம் பண்ணிய நடிகை