Gossip: ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர்தான் அந்த நடிகை. இப்போது அம்மா கேரக்டர்களில் நடித்தாலும் அவருடைய இளமைக்கால நடிப்பையும் நடனத்தையும் யாராலும் மறக்க முடியாது.
தற்போது இந்த நடிகை கொஞ்சம் உடல்நல பிரச்சனையில் இருக்கிறார். இருப்பினும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் முன்னணி இடத்தில் நடித்த போது நவரச நடிகரை காதலித்தார். அந்த நடிகருக்கு ஹீரோயின்களிடம் நெருக்கமாக பழகுவது கழட்டி விடுவது எல்லாம் சர்வ சாதாரணம்.
அப்படித்தான் இந்த நடிகையையும் கழட்டி விட்டு விட்டார். இருவரும் ஒரு படத்தில் நடித்த போது நடந்த சம்பவம் நடிகையின் கேரியருக்கே ஆப்பு வைக்கும் விதமாக இருந்தது.
நவரச நடிகரால் மோசம் போன நடிகை
அதாவது நடிகர் சொன்ன நேரத்திற்கு சூட்டிங் வரமாட்டார். இதனால் பல தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றனர்.
அப்படித்தான் ஒரு படத்தில் நடித்த போது வெளியூர் டூர் போக நடிகர் பிளான் செய்திருக்கிறார். அதற்காக நடிகையிடம் அவர் ஏதாவது காரணம் சொல்லி ஷூட்டிங் வர முடியாது என்று சொல் என கூறியிருக்கிறார்.
நடிகையும் இவரை பகைத்துக் கொண்டால் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என தயாரிப்பாளரிடம் முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் ஷூட்டிங் வருவேன் என சொல்லி இருக்கிறார்.
ஆனால் தயாரிப்பாளரோ விவரமாக நடிகை மீது சங்கத்தில் புகார் அளித்து விட்டார். அதனால் பயந்து போன நடிகை எதிர் பேச்சு பேசாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இப்படி அந்த நடிகரால் நடிகை பல பிரச்சனையை சந்தித்திருக்கிறார். அதேபோல் நடிகரின் காதல் வலையில் சிக்கி ஏமாந்து நடிகை படாத பாடு பட்டிருக்கிறார்.