Gossip: கடந்த சில நாட்களாகவே அந்த சீரியல் நடிகை சோஷியல் மீடியாவில் பரபரப்பான செய்தியாக மாறி இருக்கிறார். ஆன்லைன் ஆடிஷன் என்ற பெயரில் வெளியான வீடியோ தான் இதற்கு காரணம்.
அதில் நடிகை போலி ஆசாமி செய்ய சொன்னது எல்லாம் செய்தார். அந்த வீடியோ மிக வேகமாக பரவிய நிலையில் அது உண்மை கிடையாது ஏ ஐ என சொல்லப்பட்டது.
நடிகையும் ஆரம்பத்தில் இந்த விஷயத்தை அசால்ட்டாக டீல் செய்தார். ஆனால் போகப் போக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
சோசியல் மீடியாவில் பொங்கிய நடிகை
அதிலும் நடிகையைப் பற்றி மோசமான கமெண்ட்டுகளும் வந்தது. இதனால் விரக்தி அடைந்த நடிகை தற்போது சோசியல் மீடியாவில் தன் கோபத்தை காட்டியிருக்கிறார்.
இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஆசாமியை விட்டுவிட்டு என்னை மட்டும் ஏன் டார்கெட் செய்றீங்க. எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு என பொங்கி உள்ளார்.
இவருக்கு ஆதரவாக சில சீரியல் நடிகைகள் பேசி வருகின்றனர். ஆனாலும் இவ்வளவு நாள் அமைதியாக இருந்துட்டு விஷயம் பெருசானதும் விளக்கம் கொடுப்பீர்களா என நெட்டிசன்கள் வழக்கம் போல நடிகையை திட்டி வருகின்றன.