வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதில் சொன்ன வாரிசு நடிகை.. கட்டிக்க போறவன் ரொம்ப பாவம்

சர்ச்சைகளுக்கும், கிசுகிசுக்களுக்கும் சொந்தமான நாயகன் தான் நடிக்கும் படங்களில் உள்ள ஹீரோயின்களுடன் மிகவும் நெருக்கமான மற்றும் முத்த காட்சிகளில் நடித்துள்ளார். தற்போது இவருடைய வாரிசுகளும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நடிகரின் மூத்த வாரிசு நடித்த முதல் படத்திலேயே எக்கச்சக்க முத்தக்காட்சிகள். அதுமட்டுமல்லாமல் கதாநாயகனுடன் மிகவும் நெருக்கமான மற்றும் அந்தரங்க காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் அந்த நடிகை முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் அந்த நடிகரின் இளைய வாரிசும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இவர் முதலில் ஹிந்தி படங்களில் நடித்தார். அங்கு இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்த நடிகை தமிழில் தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பல படங்களில் பிஸியாக உள்ளார், இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதில் அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் நடிகை வெளிப்படையாக பெண்கள் காண்டம் வாங்குவதில் எந்த தவறும் இல்லை. அதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். தங்களின் பாதுகாப்புக்காக தான் அதை வாங்குகிறார்கள். இதில் தவறாக நினைப்பதற்கு ஒன்றுமே இல்லை கூறியுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை, அப்பா எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாய்கிறது என்றும் ரசிகர்கள் அந்த நடிகையை விமர்சித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில பெண்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News