வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரொம்ப நாள் கோபத்தால், சிவாஜியை மூக்கில் ரத்தம் வர அடித்த நடிகை.. கைதட்டி பாராட்டிய இயக்குனர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து வியக்காத நபர்களே கிடையாது. நடிப்பையும் தாண்டி, ஷூட்டிங்கிற்கு சீக்கிரமாக வருவது, ஒரு வருடத்தில் குறைந்தது 10 படங்களிலாவது நடிப்பது என சினிமாவிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். அப்படிப்பட்ட சிவாஜி கணேசன் மறைந்த போதும் இன்று வரை மரியாதை, பேர், புகழ் என அனைத்தும் உள்ளது.

அப்படி இருக்கும்போது அன்றைய காலக்கட்டத்தை பற்றி சொல்லவா வேண்டும். சிவாஜி கணேசன் என்றாலே எல்லோருக்கும் மரியாதை என்பதால் அவரை தாழ்த்தும் டைலாக்குகளை அவர் முன் பேசக்கூட சக நடிகர்கள் பயப்படுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட நடிகரை பளார் பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார் பழம்பெரும் நடிகை ஒருவர்.

Also Read: கமலைக் கலாய்த்து தள்ளிய சிவாஜி.. ஷூட்டிங் ஸ்பாட்டையே பங்கம் செய்த நடிகர் திலகம்

சிவாஜி கணேசனுடன் நடிக்க வேண்டும் என்றால் அவருக்கு சமமாக நடிக்க தெரிந்த நடிகைகள் தான் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியும். அப்படி அவருக்கு சமமாக கிட்டத்தட்ட 75 படங்கள் வரை ஜோடி சேர்ந்து நடித்த ஒரே நடிகை தான் பத்மினி. இவர் சிவாஜி கணேசனுடன் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாட்டிய பேரொளியாக நடித்ததை நம் யாராலும் மறக்க முடியாது.

இதனிடையே 1954 ஆம் ஆண்டு இயக்குனர் நாராயண மூர்த்தி இயக்கத்தில் சிவாஜி கணேசன்,பத்மினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான எதிர்ப்பாராதது திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருப்பர். அந்த படத்தில் பத்மினியும், சிவாஜியும் காதல் செய்து வந்த நிலையில், சில சூழ்நிலையால் அவர்கள் பிரிந்து விடுவார்கள். மேலும் பத்மினி வேறு ஒருவரை திருமணம் செய்த்துக்கொள்வார், இதுதான் இப்படத்தின் கதை.

Also Read: பாடல், சண்டை இல்லாமல் ஹிட் அடித்த சிவாஜி படம்.. முதன் முதலாக தமிழில் வந்த திரில்லர் கதை

இதில் பத்மினிக்கு திருமணம் ஆகிவிட்டதை கண்ட சிவாஜி மனம் நொந்து பத்மினியின் கையை பிடிப்பார். இதில் ஆத்திரமடைந்த பத்மினி சிவாஜியை தன் இரு கைகளால் பளார் பளார் என அடிப்பார். முதலில் இயக்குனர் இந்த காட்சியில் பத்மினியை நடிக்க சொன்னபோது நான் எப்படி சிவாஜியை அடிப்பது எனவும் நடிக்கவே மாட்டேன் எனவும் பத்மினி பிடிவாதம் பிடித்தாராம்.

இதை அறிந்துகொண்ட சிவாஜி, பத்மினியிடம் சென்று இந்த காட்சிதான் படத்திலேயே முக்கியமான காட்சி, நீங்கள் என்னை அடியுங்கள் என பத்மினியிடம் கூறினாராம். சிவாஜியின் பேச்சை கேட்டு அந்த சீனில் பத்மினி நடித்த நிலையில், எங்கிருந்துதான் அந்த கோபம் அவருக்கு வந்ததோ தெரியவில்லை சிவாஜியின் மூக்கில் ரத்தம் வரும் அளவிற்கு பத்மினி அவரை அடித்துள்ளார்.இதை கண்ட இயக்குனர் சிவாஜியின் நிலையை மறந்து பத்மினியை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Also Read: எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு முன்பே சாதனை படைத்த நாயகன்.. தொழில்நுட்பம் இல்லாமலேயே இரட்டை வேடத்தில் நடித்த சுவாரஸ்யம்

Trending News