ஹோம்லி கெட்டப்பில் வர சொன்ன இயக்குனர்.. ஹாலிவுட் ரேஞ்சுக்கு கிளாமர் காட்டிய நடிகை

கேரளத்தில் இருந்து வந்த நடிகை தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் புகழ்பெற்றிருக்கிறார். இப்போது பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட் ஆகிறது.

ஆனால் ஆரம்பத்தில் மிகவும் பிரபலம் இல்லாத நடிகை ஒரு சில படங்களில் நடித்திருந்தார். அப்போது இயக்குனர் நடிகையை ஒரு படத்தில் கமிட் செய்திருந்தார்.

மேலும் அந்த படத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரம் என்பதால் ஹோம்லி லுக்கில் வர சொல்லி இருக்கிறார். படம் முழுக்க நடிகை அதுபோன்றுதான் நடித்திருந்தார்.

கிளாமர் காட்டி மார்க்கெட்டை பிடித்த நடிகை

ஆனால் திடீரென ஹாலிவுட் ரேஞ்சுக்கு கிளாமர் காட்டி படபிடிப்புக்கு வந்து திக்கு முக்காட செய்து விட்டார். இதைப் பார்த்த இயக்குனர் என்னம்மா இப்படி வந்து இருக்கீங்க என்று கேட்டிருக்கிறார்.

நான் கிளாமர் காட்டி ரீச் ஆகலான்னு பார்த்தா நீங்க என்ன ஹோம்லி லுக்கில் காட்டுறீங்க. படத்துல தான் அப்படி வர முடியல படப்பிடிப்புக்காகது இப்படி வந்துள்ளேன் என்று சொல்லி உள்ளார்.

இதை கேட்ட இயக்குனர் வாயடைத்து போய்விட்டாராம். மேலும் நடிகையின் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்துவிட்டது.

தொடர்ந்து கவர்ச்சி காட்டி ஒரு முன்னணி இடத்தை பிடித்து விட்டார். கிளாமர் தான் கை கொடுத்து நடிகையை சினிமாவில் தூக்கி விட்டது என்றே சொல்லலாம்.

Leave a Comment