Gossip: சில வருடங்களாக இந்த காதல் ஜோடி தான் மீடியாவின் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றனர். எங்கு போனாலும் இவர்களை கையும் களவுமாக பிடித்து விடுகிறது மீடியா.
ஆனாலும் கமுக்கமாக காதலை வளர்த்து வருகிறது இந்த ஜோடி. அந்த இளம் நடிகருடன் காதலில் கசிந்துருக்கிய நடிகை இப்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அத்துடன் சேர்த்து காதலருடன் டேட்டிங் மீட்டிங் என என்ஜாய் செய்து வருகிறார். வழக்கம்போல இருவரும் தனித்தனியாக சென்றாலும் கேமரா கண்களில் தப்பவில்லை.
ஆனாலும் போட்டோ லீக் ஆயிடுச்சே
ஏற்கனவே இருவரும் தனித்தனியாக வெளிநாடு செல்வது போல் காட்டிக் கொண்டார்கள். ஆனாலும் சமாச்சாரம் எப்படியோ வெளியில் தெரிந்து விட்டது.
அப்படித்தான் தற்போது நடிகை தன் காதலருடன் பிரபல ஹோட்டலுக்கு சென்றது போட்டோவாக லீக் ஆகி இருக்கிறது. அதான் எல்லாருக்கும் தெரியுது.
அப்புறம் எதுக்கு மறைக்கணும் என இதை விஷயம் தெரிந்தவர்கள் சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர். இதுல அந்த இளம் ஹீரோ ஹோட்டலுக்கு பின்வாசல் வழியாக வந்ததை சிலர் சிரித்தபடி கமண்ட் அடிக்கின்றனர்.