சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மீடியாக்களின் கண்ணில் சிக்காமல் ஆட்டம் காட்டும் நடிகை.. காரணம் அந்த ஹீரோவா.?

சமீபத்தில் வெளியாகி கொண்டாடப்பட்டு வரும் அப்படம் வசூலிலும் கெத்து காட்டியுள்ளது. ஆனால் இதற்கு விதை போட்டது வேர்ல்ட் ஹீரோ தான் என்பதை மறுக்க முடியாது.

இப்போது அந்த பழைய படமும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அது மட்டுமல்லாமல் படத்தின் ஹீரோயின் எங்கிருக்கிறார் என்ற தேடுதல் வேட்டையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

உண்மையில் அப்படத்தில் நடித்த கையோடு நடிகைக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்திருக்கிறது. ஆனால் அவர் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் அந்த படத்தில் ஹீரோ கொடுத்த டார்ச்சர் தான். தன்னைவிட ஹீரோயினுக்கு அதிக பேர் புகழ் கிடைத்து விடுமோ என அவர் சில வேலைகளை செய்தாராம்.

அதனாலயே அவரை பொம்மை போல் சில இடங்களில் காட்டி திறமையை மூடி மறைத்ததாக ஒரு தகவல் உண்டு. ஆனால் அந்த ஹீரோயின் உடனே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனதால் தான் நடிப்புக்கு குட்பை சொன்னாராம்.

இப்படி சில யூகங்கள் இருந்து வரும் நிலையில் இப்போது அவர் எங்கிருக்கிறார் என பலரும் சோசியல் மீடியாவில் தேடி வருகின்றனர். ஆனால் நடிகையோ மீடியா கண்களுக்கு போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்ட அவர் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து போய்க் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அப்போதும் கூட தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம்.

சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையை ஒரு ஏர்போர்ட்டில் சிலர் பார்த்திருக்கிறார்கள். ஆனாலும் மீடியாக்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Trending News