வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை அவமானப்படுத்திய நடிகை.. ரெட் கார்டு இல்லாமலேயே காலி செய்த வைகை புயல்

நகைச்சுவை மன்னனாக இருக்கும் வடிவேலு இப்போதெல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சை வளையத்துக்குள் சிக்கி வருகிறார். அதிக சம்பளம் கேட்பது கால்ஷூட் சொதப்புவது பிரபலங்களை பகைத்துக் கொள்வது என்று இவருடைய பெயர் ஏதாவது ஒரு வகையில் டேமேஜ் ஆகி கொண்டே இருக்கிறது. அதில் லேட்டஸ்ட் ஆக துணை நடிகை ஒருவர் இவர் பற்றி பரபரப்பை கிளப்பும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது வடிவேலுவுடன் பம்பர கண்ணாலே, இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர்தான் பிரேமா பிரியா. ராஜா ராணி திரைப்படத்தில் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் பார்ப்பதற்கு குட்டி செந்தில் போன்று வந்து கலக்கியவர் தான் இந்த நடிகை.

Also read: வடிவேலு, விவேக் படங்களில் நடித்த காமெடி நடிகர்.. திடீர் மறைவால் அதிர்ச்சியில் உறைந்த கோலிவுட்

இவர் வடிவேலு உடன் சுறா படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார். அப்போது வடிவேலு இவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு நடிகையை அந்த காட்சியில் நடிக்க வைத்திருக்கிறார். இதனால் ஏமாற்றம் அடைந்த பிரேமா பிரியா ஏவிஎம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த வடிவேலுவை பார்ப்பதற்கு அங்கு சென்று இருக்கிறார்.

அங்கு சென்ற அவர் சுற்றி இருந்த ஆர்ட்டிஸ்ட் யாரையும் கவனிக்காமல் தனக்கு நியாயம் கேட்டிருக்கிறார். மேலும் வடிவேலுவுடன் ஆக்ரோஷமாக சண்டையும் போட்டு இருக்கிறார். இந்த ஒரு சம்பவம் தான் அவருடைய ஒட்டுமொத்த திரை வாழ்வையும் முடக்கியது. அதாவது ஒரு துணை நடிகை தன்னை எல்லார் முன்பும் அவமானப்படுத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாத வடிவேலு பிரேமா பிரியாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத படி செய்திருக்கிறார்.

Also read: மீண்டும் பார்க்கத் தூண்டும் சுந்தர் சி-யின் 5 சிறந்த படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரசாந்த் வடிவேலு காம்போ

வடிவேலுவின் பேச்சை மீற முடியாத பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பிரேமா பிரியாவை ஒதுக்க ஆரம்பித்து இருக்கின்றனர். இதனால் வாய்ப்புகள் இல்லாமல் தவித்த அவர் கொரோனா காலகட்டத்தில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைப்பட்டிருக்கிறார். அதாவது அவருடைய குடும்பத்தில் கணவர் உட்பட அடுத்தடுத்த உறவுகள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து போய் இருக்கின்றனர்.

தற்போது ஒரு மகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் அவர் தன் வாழ்க்கை வடிவேலுவால் நாசமாகிவிட்டதாக ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே வடிவேலு கோபம் வந்தால் எப்படி வேண்டுமானாலும் மாறுவார் என்று பலரும் கூறி இருக்கிறார்கள். அதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக இருக்கிறது.

Also read: படு மொக்கை போடும் வடிவேலு.. பழைய படங்களை பட்டி டிங்கரிங் பார்த்து வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் ட்ரெய்லர்

Trending News