ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கிணறு வெட்ட கிளம்பிய பூதம்.. இளம் ஹீரோவால் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டிருக்கும் நடிகை

கடந்த சில நாட்களாகவே இளம் ஹீரோவின் பஞ்சாயத்து தான் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற கதையாக அவரைப் பற்றி வெளிவரும் ஒவ்வொரு ரகசியங்களும் நம்ப முடியாத அதிர்ச்சியாக இருக்கிறது. அதிலும் சில பிரபலங்களே அதை வெளிப்படையாக கூறி வருவது வாயடைக்க வைத்துள்ளது.

பெண்கள் விஷயத்தில் எல்லாருமே ஒரே மாதிரி தான் என்று நிரூபிக்கும் வகையில் ஹீரோவின் அந்தரங்க லீலைகள் இப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளை இவர் தொடர்ச்சியாக இரண்டு படங்களில் கமிட் செய்வதும் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

அதாவது நடிகருக்கு ஒரு ஹீரோயினை பிடித்து விட்டால் உடனே அடுத்த படத்திலும் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்து விடுவாராம். இதற்கு உதாரணமாக பல விஷயங்களை சொல்லலாம். அதிலும் வாரிசு நடிகைக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்ததும் இவருடைய படம் தான்.

அந்த சமயத்தில் இவர்களுக்குள் இருக்கும் கசமுசாவை ஊரே பேசியது. ஆனால் அந்த ஹீரோ அப்படி எல்லாம் இல்லை என்று வக்காலத்து வாங்கியவர்கள் கூட ஒரு வேளை இருக்குமோ என்று இப்போது பேசி வருகின்றனர். அந்த அளவுக்கு பேரை டேமேஜ் செய்து வைத்திருக்கும் அவர் இப்போது வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு நொந்து போயிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் இளம் நடிகை ஒருவரும் இப்போது வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறாராம். ஏனென்றால் நடிகருடன் இப்போது அவர்தான் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். எங்கே தன்னுடைய விஷயம் வெளியில் வந்து வாய்ப்பு போய்விடுமோ என்ற பதட்டத்தில் அவர் இருக்கிறாராம்.

அது மட்டுமல்லாமல் மார்க்கெட் காலி ஆகி வீட்டில் பொழுதை போக்கிக் கொண்டிருக்கும் நடிகையுடன் ஹீரோவுக்கு இருந்த பழக்கமும் அம்பலமாகி வருகிறது. இப்படியாக நடிகர் விளையாடிய அந்தரங்க விளையாட்டு இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Trending News