வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கேரக்டர் பிடிக்காமல் பாதியிலேயே வெளியேறிய நடிகை.. கடுப்பாகி பழி தீர்த்த இளைய நடிகர்

எப்போதுமே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நடிகை ஒருவர் இப்போது மாஸ் ஹீரோவிடம் தன் வேலையை காட்டி இருக்கிறார். மனதில் பட்டதை முகத்திற்கு நேராக பளிச்சென்று பேசக்கூடிய அந்த நடிகைக்கு பல எதிர்ப்பாளர்கள் இருந்தாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வது கிடையாது.

ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை தற்போது குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் அவ்வப்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு சமீபத்தில் மாஸ் ஹீரோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Also read: மேடையில் விலகிய ஆடை, ரகசியமாக சிக்கிய போட்டோ.. மானத்தை மறைக்க போட்டோகிராபரை கரெக்ட் செய்த நடிகை

ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்த அந்த படத்தில் நடிக்க நடிகையும் சந்தோஷமாக சம்மதித்தார். ஆனால் ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என யோசித்த நடிகை வழக்கம் போல தன் வேலையை காட்டி இருக்கிறார். அதாவது ஹீரோவுக்கு இணையாக தனக்கும் காட்சிகள் வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தாராம்.

அது முடியாது என்று இயக்குனர் கூறியதால் இந்த படமே வேண்டாம் என்று கோபித்துக் கொண்ட அந்த நடிகை சொல்லாமல் கொள்ளாமல் இடத்தை காலி செய்திருக்கிறார். நடிகரிடம் கூட அவர் இதைப் பற்றி சொல்லாமல் வெளியேறி இருக்கிறார். இது ஹீரோவுக்கு பெரும் அவமானத்தை கொடுத்திருக்கிறது.

Also read: நடிகையின் மயக்கத்தில் இருக்கும் ஹீரோ.. கொதித்துப் போய் விவாகரத்துக்கு ரெடியாகும் மனைவி

ஏனென்றால் அவர்தான் நடிகை இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாராம். இந்த சம்பவம் நடிகருக்கு கோபத்தை கொடுத்தாலும் அமைதியாகவே இருந்திருக்கிறார். ஆனால் நடிகை தனக்கு இருந்த கோபத்தை ஒரு பொது நிகழ்ச்சியில் வெளிப்படையாக காட்டி இருக்கிறார். இந்த விஷயம் நடிகரின் காதுக்கு வர ரொம்பவும் கடுப்பாகி விட்டாராம்.

உடனே தன் மேனேஜரை கூப்பிட்டு என்னுடைய படங்களில் இனிமேல் அந்த நடிகைக்கு வாய்ப்பே கிடையாது. அவரை எக்காரணம் கொண்டும் புக் செய்ய வேண்டாம் என்று கண்டிஷனாக கூறிவிட்டாராம். கேரக்டர் பிடிக்காமல் பாதியிலேயே வெளியேறிய நடிகையை பழி தீர்த்த இளைய நடிகர் பற்றி தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read: ராக்கி கட்டியவர் கையால் தாலி கட்டிக் கொண்ட நடிகை.. கெட்ட பெயர் வந்தாலும் நினைத்ததை சாதித்த அம்மணி

Trending News