வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கவர்ச்சியை காட்டி நடிகர் சங்க தலைவரை வளைத்துப் போட்ட நடிகை.. இயக்குனரின் சதியில் இருந்து தப்பிக்க செய்த ராஜதந்திரம்

நடிகைகள் சினிமாவில் காலூன்றுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு நடிகைகளும் பல வருடங்கள் சினிமாவில் இருக்க வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது, சினிமாவில் கவர்ச்சியை சற்று தூக்கலாக காண்பிப்பது, சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவது என பல வேலைகளை செய்து தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்வார்கள்.

அப்படி தமிழையும் தாண்டி தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் தான் புன்னகை அரசி சினேகா. இவரது சிரிப்புக்கு என்றே இன்றுவரை தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் குடும்ப குத்துவிளக்கு நடிகை என பெயர் வாங்கிய சினேகா தன் மார்க்கெட்டை தக்க வைக்க கவர்ச்சியாக உடை அணிந்து நடிகர் சங்க தலைவரை தன் வசம் ஈர்த்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

Also Read: அதிர்ச்சி தரும்படி விலை மாதுவாக நடித்த 6 நடிகைகள்.. சினேகாவையே அந்தரங்க தொழிலாளியாக ஆக்கிய செல்வராகவன்

நடிகை சினேகா 2002 ஆம் ஆண்டு வெளியான விரும்புகிறேன் திரைப்படத்தில் தான் முதன்முதலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம். இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக சினேகா இப்படத்தில் நடித்திருப்பார். ஆனால் இப்படம் ரிலீஸாவதற்கு முன்பே சினேகா நடித்த மற்ற 6 படங்கள் ரிலீசானது. இதற்கான காரணம் விரும்புகிறேன் படத்தை எடுத்துக்கொண்டிருக்கும் போது திடீரென தயாரிப்பாளருக்கு பண நெருக்கடி வந்துள்ளது.

இதனால் இப்படத்தின் படப்பிடிப்பை பாதியிலேயே இயக்குனர் சுசி கணேசன் நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக நடிகை சினேகா தனக்கு வாய்ப்பு வந்த மற்ற படங்களில் நடிக்க கிளம்பியுள்ளார். இதையறிந்த சுசி கணேசன் விரும்புகிறேன் திரைப்படத்தின் ஷூட்டிங் முடியும் வரை மற்ற படங்களில் நடிக்க கூடாது என சினேகாவிடம் கூறியுள்ளார். ஆனால் சினேகா இவர் சொன்னதை கேட்காமல் தனது அடுத்த வேலையை செய்ய ஆரம்பித்துள்ளார்.

Also Read: சினேகா எப்படி பட வாய்ப்புகளை பெற்றார்.. வேறென்ன இப்படித்தான் என நக்கல் அடிக்கும் பயில்வான்.!

இதனால் ஆத்திரமடைந்த சுசி கணேசன் நடிகர் சங்கத்தை நாடி சினேகாவை பஞ்சாயத்திற்கு இழுத்துள்ளார். ஆனால் சினேகாவோ, அந்த நேரத்தில் ராஜதந்திரமாக யோசித்து கவர்ச்சியான உடையணிந்து அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் நடிகர் சங்க தலைவராக இருந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். அவர் சினேகாவின் கவர்ச்சியை பார்த்து மயங்கி அவருக்கே அன்று தீர்ப்பினை சாதகமாக வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் சினேகா சில படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டார். பொதுவாக கேப்டன் விஜயகாந்த் எந்த ஒரு நடிகையிடமும் அவ்வளவு எளிதாக மயங்கியது இல்லை. ஆனால் சினேகாவை பார்த்த முதல் நாளே அவரிடம் தன் மனதை பறிக்கொடுத்துவிட்டார் . அதன் பின்னர் சினேகா நடிக்கும் படங்களில் எந்த பிரச்சனை வந்தாலும் கேப்டன் விஜயகாந்தே நேரில் சென்று சரிசெய்து கொடுத்துள்ளாராம்.

Also Read: முன்று தலைமுறையாக புன்னகை அரசி என அழைக்கப்பட்ட 3 நடிகைகள்.. சினேகாவுக்கு முன்னரே பெயர் வாங்கிய இருவர்

Trending News