புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நம்பர் நடிகையே பரவால்ல.. வாரிசு நடிகை செய்யும் அலும்பு, எங்க போய் முடிய போகுதோ.?

Gossip: நம்பர் நடிகை சில வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் காட்டிய பந்தா கொஞ்சநஞ்சம் கிடையாது. அதிலும் கதையின் நாயகியாக அவர் நடிக்க தொடங்கிய பிறகு சொல்லவே வேண்டாம்.

இப்படித்தான் இருப்பேன் பிரமோஷனுக்கு வர மாட்டேன் என ஏகப்பட்ட கண்டிஷன் போட்டார். அதேபோல் சம்பளத்தையும் உயர்த்தி ஹீரோ ரேஞ்சுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள சில பல வேலைகளை பார்த்தார்.

ஆனால் இப்போது அவர் நிறையவே மாறிவிட்டார். அதனால் அந்த இடத்தை நான் எடுத்துக்கிறேன் என்ற பெயரில் வாரிசு நடிகை போடும் ஆட்டம் ரொம்பவே ஓவராக இருக்கிறது.

வாரிசு நடிகை பண்ணும் அழிச்சாட்டியம்

சோலோ ஹீரோயின் ஆகத்தான் நடிப்பேன் என அடுத்தடுத்த படங்களை கைவசப்படுத்தி வருகிறார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்பதுதான் உண்மை. தற்போது கூட அவர் இதே பாணியில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இது எந்த லட்சணத்தில் இருக்குமோ என வெளிப்படையாகவே சிலர் பேச ஆரம்பித்து விட்டனர். அதிலும் அம்மணி தற்போது பல்வேறு மொழிகளிலும் நடிக்க தொடங்கி விட்டார். அதனால் பந்தாவுக்கு குறைச்சல் இல்லாமல் இருக்கிறதாம்.

தன்னை தூக்கி விட்ட மொழியை கூட தற்போது அவர் மட்டம் தட்டி பேசும் அளவுக்கு வந்து விட்டாராம். இப்படி எல்லாம் ஆட்டம் போட்டவர்களின் நிலை என்ன ஆனது என இவருக்கு தெரியவில்லை. இதெல்லாம் எங்கே போய் முடிய போகிறதோ என செய்தியை கேள்விப்பட்ட பலரும் தலையில் அடித்தபடி நகர்கிறார்கள்.

Trending News