ஒரு காலத்தில் டாப் ஹீரோக்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அந்த நடிகைக்காக தவம் இருந்தார்கள். அந்த அளவுக்கு கோலிவுட் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலங்களையும் தன் வசப்படுத்தி இருந்தார் அந்த நடிகை.
இன்னும் சொல்லப்போனால் இந்த நடிகையின் கால் சீட்டுக்காக முன்னணி ஹீரோக்கள் அனைவரும் காத்திருப்பார்களாம். அதேபோல் இளம் நடிகர்கள் கூட இவருடன் நடிக்க ஏங்கி இருக்கிறார்கள்.
ஆனால் அம்மணியோ மற்ற விஷயங்களில் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட். கதைக்கு தேவையான கிளாமரில் நடிக்கும் அவர் எந்த ஹீரோவோடும் நெருங்கி பழக மாட்டார். அப்படிப்பட்டவரை பிளேபாய் நடிகர் ஒருவர் தன் வசப்படுத்தினார்.
நடிகையின் மறுபக்கம்
இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்த நிலையில் மீடியாவிலும் இது கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் நடிகை அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் போரடித்து போய் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்தனர்.
அதன் பிறகு நடிகை தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தார். சமீபத்தில் அவர் வீட்டில் நடந்த சம்பவத்தால் நடிகை ரொம்பவும் துவண்டு போனார். அவருக்கு பலரும் ஆறுதல் சொல்லி வந்த நிலையில் அந்த நடிகரும் சப்போர்ட்டாக இருந்திருக்கிறார்.
அதை தொடர்ந்து அந்த நெருக்கம் மீண்டும் பற்றிக் கொண்டதாம். தற்போது இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து கொள்வதாக படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இது வெளியில் வரலாம் என்கிறது திரையுலக வட்டாரம்.