திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

காதல் கணவரின் ஆசைக்கு தடை போட்ட நடிகை.. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ

Gossip: பல வருடங்களாக நடித்துக் கொண்டிருந்தாலும் வாரிசு நடிகைக்கு இப்போதுதான் ஒரு பிரேக் கிடைத்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து விட்டார்.

இது பலருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தான். ஏனென்றால் நடிகை நடிக்க வந்த புதிதில் பல ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். ஆனால் அதில் அந்த டாப் ஹீரோவுடன் வந்த கிசு கிசு தான் அதிகம்.

இருவரும் ரகசிய குடுத்தனம் நடத்துவதாக கூட செய்திகள் வந்தது. ஆனால் இரு தரப்பிலும் இது பற்றி பெரிதாக கவலைப்படவில்லை.

அந்த சமயத்தில் தான் நடிகை சட்டுபுட்டுன்னு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனாலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

காதல் கணவரின் ஆசைக்கு தடை போட்ட நடிகை

அது மட்டும் இன்றி திருமணத்திற்கு பிறகு தான் நடிகை ரொம்பவும் தாராளமாக உடை அணிந்து வருகிறார். இதெல்லாம் புகுந்த வீட்டுக்காரங்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம்.

ஆனாலும் நடிகை நான் இப்படித்தான் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி இருக்கிறார். சரி பரவாயில்லை திருமணம் முடிந்த கையோடு குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என பெரியவர்கள் சொல்லி இருக்கின்றனர்.

ஆனால் நடிகையோ அதெல்லாம் முடியாது சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு என சொல்லிவிட்டாராம். கணவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட குழந்தை ஆசைக்கு தடை போட்டு இருக்கிறார்.

இதனால் புதுமண தம்பதிகளுக்கு இடையே சிறு உரசல் இருக்கிறதாம். இதெல்லாம் எங்க போய் முடிய போகிறதோ என திரையுலகில் சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர்.

Trending News