ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கள்ளக்காதல் படங்களில் எதார்த்தம் காட்டிய நடிகை.. கடைசியில் அதுவே தர்த்தினியமாக முடிந்த சோகம்

முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச் சென்றவர் தான் அந்த நடிகை. அதன் காரணமாகவே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்தது. ஆனால் அப்படி அவரை தேடி வந்த வாய்ப்புகள் அனைத்தும் கொஞ்சம் ஏடாகூடமாகவே இருந்தது. ஏனென்றால் முதல் படத்திலேயே இந்த நடிகை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.

ஏதோ வாய்ப்பு கிடைக்கிறதே என்று நடிகையும் அது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இறுதியில் அதுவே அவருக்கு வினையாகி போனது. ஏனென்றால் இந்த நடிகையின் நடிப்பில் தொடர்ச்சியாக வெளிவந்த அத்தனை படங்களும் ஐட்டம், கள்ளக்காதல் போன்ற கதாபாத்திரங்களாக தான் இருந்தது.

Also read: விவாகரத்துக்கு பின்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.. பகிரங்கமாக ஒத்துக் கொண்ட வாரிசு நடிகை

இருப்பினும் நடிகைக்கு ஒரு திரைப்படத்தில் அடக்க ஒடுக்கமாக இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் படியான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதெல்லாம் உங்களுக்கு செட்டே ஆகாது என்ற ரீதியில் அந்த படம் வந்த வேகத்திலேயே திரும்பி போனது. உடனே சுதாரித்துக் கொண்ட நடிகை மோசமான கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் அம்மணி ஒரு திரைப்படத்தில் கட்டிய புருஷனை விட்டுவிட்டு கள்ளக்காதலனோடு சென்றுவிடுவார். இப்படி பரபரப்பை கிளப்பிய அந்த படத்திற்கு பிறகு நடிகைக்கு சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் எதார்த்தமான கதையை இயக்கும் ஒருவரின் படத்தில் நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது.

Also read: நல்ல நடிக்க தெரிந்தும் ஐட்டம் நடிகையாக மாறிய ஹீரோயின்.. அட்ஜஸ்ட்மென்ட் பண்ணாததால் வந்த விளைவு

ஆனால் அந்த இயக்குனரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற கண்டிஷன் போட்டதால் நடிகை அப்படத்திலிருந்து விலகினார். அது மட்டுமல்லாமல் தனக்கு நடந்த இந்த விஷயத்தையும் மீடியாவில் அம்பலப்படுத்தினார். இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் சம்பந்தப்பட்ட இயக்குனரோ நடிகையைப் பற்றி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கினார். உண்மையில் நடிகை இப்படிப்பட்ட கேரக்டர்களில் நடித்ததால் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார் என்ற எண்ணம் தான் அந்த இயக்குனருக்கு இருந்திருக்கிறது.

அதன் விளைவாக இப்போது அந்த நடிகை பீல்டு அவுட் ஆகி வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். வாய்ப்புக்காகவும், பணத்திற்காகவும் ஆசைப்பட்டு இப்படி தன்னுடைய கேரியரை கெடுத்துக் கொண்ட அந்த நடிகையை போல் இளம் நடிகை ஒருவரும் வேண்டாத வேலையை செய்து வருகிறார். அவருடைய கேரியர் என்ன ஆகுமோ என்றுதான் இப்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read: 41 வயது வரை காதல் என்ற பெயரில் நடிகையை ஏமாற்றிய பிரபலம்.. கழட்டிவிட்டு கல்யாணம் செய்யும் அவலம்

Trending News