திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காதலுக்கு மறுத்ததால் நோயை பரப்பிவிட்ட நடிகை.. கேரியருக்கு வைத்த பெரிய ஆப்பு

உச்ச நடிகர்களுக்கு இணையாக கொடிகட்டி பறந்தவர் தான் அந்த ஹீரோ. வருடம் முழுவதும் பிசியாக இருக்கும் இவருக்கு நிற்க கூட நேரம் இருக்காது. அந்த அளவுக்கு மாதத்திற்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்வார். அதனாலேயே இவர்களுக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது.

அதிலும் அன்றைய காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாகவும் இவர் இருந்தார். அப்படிப்பட்ட இந்த ஹீரோ ஒரு காலகட்டத்திற்கு பிறகு எங்கு இருக்கிறார் என்று சல்லடை போட்டு தேடும் அளவுக்கு காணாமல் போனார்.

Also read: கூட இருந்து குழி பறித்த குடும்பம்.. கடைசியில் சோத்துக்கு வழி இல்லாமல் வீதிக்கு வந்த நடிகை

அது மட்டுமின்றி இவருக்கு பலான நோய் இருப்பதாகவும் அப்போது திரையுலகில் அதிவேகமாக ஒரு தகவல் பரவியது. அதைத்தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி போன நடிகரை சில வருடங்களில் ரசிகர்களும் மறந்து போனார்கள். ஆனால் நடிகரின் இந்த நிலைமைக்கு காரணம் பிரபல நடிகை ஒருவர்தான் என்று வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது இவருடன் இணைந்து நடித்த முன்னணி நடிகை ஒருவர் இவரின் மேல் காதல் பித்து கொண்டிருக்கிறார். அந்த மயக்கத்தில் இவரிடம் காதலை சொல்ல போக நடிகர் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி காதலுக்கு அடிமையாகக் கூடாது என்று அவர் எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

Also read: வாய்ப்புக்காக இயக்குனரை மடக்கி போட்ட நடிகை.. கர்ப்பமானதால் நடந்த சக்களத்தி சண்டை

இவ்வாறு வலிய போய் கேட்டும் கூட அவர் மறுத்தது நடிகைக்கு அவமானமாக இருந்திருக்கிறது. அதனாலேயே இப்படி ஒரு கட்டுக் கதையை பரப்பி நடிகரின் கேரியருக்கு ஆப்பு வைத்திருக்கிறார். இப்படி டாப் ஹீரோவின் விதியையே மாற்றிய இந்த நடிகை சில காலங்களில் ஒரு பிரபலத்தை மணந்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Trending News