Gossip: தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த நடிகைக்கு இப்போதும் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பிஸியாக இருந்த போதே திடீரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார் நடிகை.
மலையாளத்தில் பெரிய குடும்பத்தில் வாக்கப்பட்ட அந்த நடிகை தற்போது பல கோடி சொத்துகளுக்கு அதிபதியாக இருக்கிறார். இதற்கு காரணம் அவர் செய்யும் பிசினஸ் தான்.
நடிகையின் கணவரும் பெரிய பிரபலம் என்பதால் இருவரும் சேர்த்த சொத்துக்களை அவர் கந்து வட்டிக்கு விடுகிறாராம். அதன் மூலம் பல சொத்துக்கள் அவர் கைவசம் வந்திருக்கிறது.
கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் நடிகை
அதிக வட்டிக்கு பணம் கொடுத்து பல தயாரிப்பாளர்களிடம் இவர் பெரிய தொகை பார்த்து வருகிறார். படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் பிரபல நடிகர்களும் இவரிடம் சிக்கியது தான் ஹைலைட்.
அவர்களால் கடனை திருப்பித் தர முடியாத நிலையில் வீடு மனை எல்லாவற்றையும் சுருட்டி கொள்கிறாராம் நடிகை. இதற்கு அவருடைய கணவர் முழு சப்போர்ட் செய்து வருகிறார்.
இதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக். இது எவ்வளவு பெரிய ரிஸ்க்கான பிசினஸ் என்பது நடிகைக்கு தெரியவில்லை. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ என விஷயத்தை கேள்வி பட்டவர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.