திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நயன்தாரா மீது வன்மத்துடன் சுற்றும் சில்வண்டு.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நடிகை

இப்போது இருக்கும் முன்னணி ஹீரோயின்களில் ஹீரோக்களுக்கு இணையாக மாஸ் காட்டில் வரும் ஒரே நடிகை நயன்தாரா தான். சம்பள விஷயத்தில் தொடங்கி தனக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை தேர்ந்தெடுப்பது வரை அவர் மற்ற நடிகைகளை விட ஒரு படி முன்னிலையில் தான் இருக்கிறார். அதனால் தான் அவர் அடுத்தடுத்த தோல்வி படங்களை கொடுத்தாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் நயன்தாரா இப்போது ஜவான் திரைப்படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் அந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளிவர இருக்கிறது. அதற்கான பரபரப்பான வேலைகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில் நயன்தாராவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது. தற்போது அவர் தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

Also read: காதல் கணவருக்கு ஏற்பட்ட அவமானம்.. நயன்தாரா எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் திரையுலகம்

திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்கும் படம் என்பதால் இதற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் நயன்தாரா பற்றி பேசிய பேச்சு சோசியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. அதாவது தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் ஹீரோயின்களை எதற்காக அப்படி குறிப்பிட்டு அழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களாக இருக்கும் ஆலியா பட், தீபிகா படுகோன் போன்ற நடிகைகளை கூட யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெருமையாக கூறியது கிடையாது. அப்படி இருக்கும்போது ஏன் நடிகைகளை அப்படி கூப்பிட வேண்டும், அவர்களை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இவர் கூறிய இந்த விஷயம் நயன்தாரா ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இவர் நயன்தாராவின் மேக்கப் பற்றி ஒரு பேட்டியில் பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

Also read: ட்ரான்ஸ்பரண்ட் புடவை , மல்லிப்பூ என குடும்ப குத்து விளக்காக மாறிய நயன்தாரா.. மறைமுகமாக விக்கிக்கு சொன்ன அட்வைஸ்

அதாவது நயன்தாரா ஒரு படத்தில் மருத்துவமனை காட்சியில் முழு மேக்கப்புடன் இருந்தார் என்று அவர் கிண்டலாக தெரிவித்திருந்தார். இதை கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனின் போது கூறிய நயன்தாரா அதற்கான தக்க பதிலடியையும் கொடுத்திருந்தார். அவர் மட்டுமல்லாமல் ரசிகர்களும் மாளவிகாவின் நடிப்பை பற்றியும், பேட்ட மற்றும் மாஸ்டர் திரைப்படத்தின் சோகமான ஒரு காட்சிகளில் அவர் முழு மேக்கப்புடன் இருந்தது பற்றியும் கூறி கிழி கிழி என்று கிழித்தனர்.

இந்நிலையில் மீண்டும் அவரை சீண்டும் விதமாக மாளவிகா பேசி இருப்பது நிச்சயம் நயன்தாரா மீது இருக்கும் முழு வன்மம் தான் என ரசிகர்கள் கூறுகின்றனர். இப்போது திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகள் பலருக்கும் நயன்தாரா இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த வகையில் மாளவிகா, நயன்தாரா இடத்திற்கு ஆசைப்பட்டால் மட்டும் போதாது அவரைப் போன்று நடிக்கவும் வேண்டும் என ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Also read: நான் சிங்கிளா ஜெயிப்பேன், நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. விக்னேஷும் வேண்டாம், ஏகேயும் வேண்டாம்

Trending News