வாரிசுக்காக மூன்றாவது திருமணம்.. பப்ளி நடிகை வாழ்க்கையில் வீசும் புயல்

gossip-actress
gossip-actress

Gossip: பப்ளி நடிகை நடிக்க வந்த புதிதில் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்து வந்தார். ஆனால் அந்த பிரபல நடிகருடன் நடித்தபோது அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.

அவருடைய காதல் வலையில் சிக்கிய இவர் ரொம்பவும் நெருங்கி பழகி இருக்கிறார். அதன் விளைவாக கரு கலைப்பும் நடந்தது.

இப்படி நெருக்கம் காட்டி வந்த இந்த ஜோடி திடீரென பிரேக் அப் செய்து பிரிந்தது. அதன் பிறகு நடிகை நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார்.

ஆனால் அவருக்கான வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை. வேறு வழி இல்லாததால் தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அந்த நடிகை.

நடிகை வாழ்க்கையில் வீசும் புயல்

ஆனால் இப்போது திருமண வாழ்க்கையில் வெறும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம். அதாவது நடிகை ஏற்கனவே செய்த கருக்கலைப்பின் விளைவாக தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக முடியாத நிலையில் இருக்கிறார்.

இதை ஏற்கனவே அவர் தன் கணவரிடம் திருமணத்திற்கு முன்பு சொல்லி இருக்கிறார். ஆனால் அவரோ தன் குடும்பத்தாரிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார்.

அதன் விளைவு தற்போது நடிகைக்கு மாமியார் வீட்டில் இருந்து குடைச்சல் வர ஆரம்பித்து விட்டதாம். குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்றால் அவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்களாம்.

மூன்றாவது திருமணம் செய்தாவது மகனின் வாரிசை பார்க்க வேண்டும் என அவர்கள் தீவிரமாக இருக்கிறார்களாம். இருப்பினும் நடிகர்க்கு கணவரின் சப்போர்ட் இருக்கிறது.

ஆனால் இது எத்தனை நாளைக்கு என்பது தான் கேள்வி குறி. இந்த விவகாரம் தற்போது கசிந்துள்ள நிலையில் நடிகையின் மீது பரிதாபம் தான் வந்துள்ளது.

Advertisement Amazon Prime Banner