புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நயன்தாராவை ஓரம் கட்ட நினைத்த நடிகை.. கரியை பூசி அனுப்பிய 3 இயக்குனர்

டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்வது, பிரம்மாண்ட பட்ஜெட், முன்னணி இயக்குனர்கள் போன்ற பல கனவுகளுடன் தான் ஹீரோயின்கள் நடிக்க வருகின்றனர். அதில் சிலருக்கு குறுகிய காலத்திலேயே அதிர்ஷ்டம் கிடைத்து விடுகிறது. ஆனால் சில நடிகைகள் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்குள் திக்கு முக்காடி போய் விடுகின்றனர்.

அப்படித்தான் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி செட்டி தமிழ் திரை உலகில் நயன்தாராவை ஓரம் கட்டி நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார். அதனாலேயே சூர்யாவின் வணங்கான் திரைப்படத்தில் ஆசை ஆசையாக நடிக்க சம்மதித்தார். அதில் பாலாவின் டார்ச்சர் அதிகமாக இருந்த போதும் இந்த காரணத்திற்காகவே அவர் பொறுத்துக் கொண்டாராம்.

Also read: குறட்டை, தூக்கம் என வித்தியாசமாக நகைச்சுவையோடு எடுத்த 5 படங்கள்.. காது கேளாமல் மாசு காட்டிய நயன்

கடைசியில் அவருடைய கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை சூர்யா படத்தில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து பாலா படத்தை இயக்கி வருகிறார். ஆனால் கீர்த்தி செட்டி மீண்டும் அந்த டார்ச்சரை அனுபவிக்க முடியாது என்ற எண்ணத்தில் பாலாவுக்கு நோ சொல்லிவிட்டாராம்.

இப்படி அவருடைய தமிழ் பட ஆசை நிராசையாகி போனது. அதை தொடர்ந்து லிங்குசாமி, வெங்கட் பிரபு இருவரும் இவரை தமிழில் முன்னணி ஹீரோயினாக மாற்றி காட்டுகிறேன் என்று கூறி நன்றாக கரியை பூசி இருக்கிறார்கள். அதாவது லிங்குசாமி இயக்கத்தில் உருவான தி வாரியர் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது.

Also read: நயன்தாரா, சமந்தா இடத்தை பிடிக்க வரும் அடுத்த ஹீரோயின்.. உலகளவில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை

அதன் மூலம் கீர்த்தியும் தமிழில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதை தொடர்ந்து சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த கஸ்டடி படமும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி கீர்த்தி செட்டிக்கு 3 இயக்குனர்களும் சரியான ஆப்பு வைத்திருக்கிறார்கள்.

எப்படியாவது கோலிவுட் ரசிகர்களை கவர்ந்து விடலாம் என்று நினைத்த அவர் இப்போது தன் நேரத்தை எண்ணி நொந்து கொண்டிருக்கிறாராம். மேலும் 19 வயதே ஆன இவர் இப்படி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துக் கொண்டிருப்பதை பார்த்து திரையுலகில் பலரும் பரிதாபப்பட்டு வருகிறார்கள். இனிமேலாவது அவர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பேசி வருகின்றனர்.

Also read: சிம்புவால் குடிக்கு அடிமையான நயன்தாரா.. முழுசாக மாற்றியது யார் தெரியுமா?

Trending News