வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

காதலனால் விரக்தி அடைந்த நடிகை.. கணவரும் பணத்தை சுருட்டிய கொடுமை

சினிமாவில் காந்த பார்வையால் தன்னை கவர்ந்த நடிகை மீது மொத்த சினிமாவும் கண் வைத்திருந்தது. ஆனால் எதிலும் சிக்காத அந்த காந்த அழகி மாஸ் ஹீரோ ஒருவரின் வகையில் மட்டும் விழுந்து விட்டார். இவர்கள் இருவரும் இணைந்து இரண்டு, மூன்று படங்களில் நடித்து வந்தனர்.

அதன் மூலம் இருவருக்கும் காதல் மலர படப்பிடிப்பு நேரத்திலேயே அதிக நேரத்தை இருவரும் செலவிட்டு வந்துள்ளனர். இதனால் கோடம்பாக்கமே இவர்களது காதல் விவகாரம் தெரிய வந்தது. ஆனால் சின்ன பிரச்சனை காரணமாக மாஸ் ஹீரோ நடிகையை கழட்டி விட்டு விட்டார்.

இதனால் மனமுடைந்து போன நடிகை சினிமாவில் சில காலம் நடிக்காமல் இருந்தார். அதன் பின்பு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் குடும்பத்தின் கட்டாயத்தின் பேரில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

வெளி உலகத்திற்கு தான் அவர் தொழிலதிபரே தவிர நடிகையின் சொத்தின் மீதுதான் அவருக்கு கண் இருந்து உள்ளது. நடிகை சம்பாதிக்கும் பணத்தில் சொகுசாக வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மேலும் நடிகையின் அனைத்து சொத்துக்களையும் தனது பெயரில் மாற்றி விட்டார் தொழிலதிபர்.

ஒரு கட்டத்தில் எல்லாமே நடிகைக்கு தெரிய வர அவரை விட்டு பிரிந்து விட்டார் தொழிலதிபர். இவ்வாறு நம்பியவர்கள் எல்லாம் ஏமாற்றிய நிலையில் தனது உடம்பிலும் பிரச்சனை நடிகைக்கு ஏற்பட்டது. இதன் பின்பு உடல்நிலை இன்னும் மோசமாகி உயிரிழந்து விட்டார்.

Trending News