வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கண்ட இடத்தில் உரசிய உதவி இயக்குனர்.. கடுப்பாகி அறைந்த நடிகை

நடிக்க வந்த புதிதில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் அந்த நடிகை. அவர் படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனர் ஒருவரை பளார் விட்டுள்ள சம்பவம் தான் பரபரப்பை கிளப்பியுள்ளது. அப்படி என்னதான் நடந்தது என்று விசாரித்ததில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது நடிகையின் அழகில் மயங்கிய உதவி இயக்குனர் ஒருவர் அவரை சைட் அடித்தபடியே இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் போகும் போது, வரும் போதெல்லாம் நடிகையை உரசுவது, தெரியாமல் கைபட்டது போல் கண்ட இடங்களில் கை வைப்பது என்று வேலையை காட்டி இருக்கிறார்.

Also read: கடைசி வரை ஒரு தலை காதலாக மாறிய நடிகையின் காதல்.. மரணப்படுக்கையில் நிறைவேறிய ஆசை

பிறகு நடிகையிடம் சாரி என்ற வார்த்தையை கூறிவிட்டு கமுக்கமாக சென்றிருக்கிறார். ஆரம்பத்தில் இதை எதார்த்தமாக எடுத்துக் கொண்ட நடிகை போக போக உதவி இயக்குனரின் காமப் பார்வையை புரிந்து கொண்டிருக்கிறார். அதனாலேயே அவர் கொஞ்சம் முன் ஜாக்கிரதையோடு இருந்திருக்கிறார்.

ஆனாலும் ஒரு கட்டத்தில் அந்த உதவி இயக்குனர் நடிகையிடம் ஓவராக நடந்து கொண்டிருக்கிறார். அதை பொறுக்க முடியாத நடிகை அவரை ஓங்கி அறைந்திருக்கிறார். இதனால் அந்த இடமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு நடிகையிடம் என்ன, ஏது என்று இயக்குனர் விசாரித்து இருக்கிறார்.

நடிகையும் உதவி இயக்குனர் செய்த இந்த கேவலமான வேலையை கோபத்தோடு கூறியிருக்கிறார். இதைக் கேட்ட அடுத்த நொடியே இயக்குனர் அவரை வேலையை விட்டு தூக்கி விட்டாராம். இந்த சம்பவம் தான் இப்போது கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் துணிச்சலுடன் நடந்து கொண்ட நடிகையையும் சிலர் பாராட்டி வருகின்றனர்.

Also read: சென்சார் போர்டை கவர்ச்சியால் அதிர வைத்த நடிகை.. 36 இடங்களில் கட் செய்து தூக்கிய படம்

Trending News