வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

10 படம் கூட நடிக்கல அதுக்குள்ள பந்தா பண்ணும் நடிகை.. ஒருநாள் ஓரமா உட்கார போறீங்க மேடம்

சின்னத்திரையில் பிரபல பாட்டுப் பாடும் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான இவர், அதன் பிறகு பல்வேறு ஷோக்களில் கலந்துகொண்டு பலருடைய கவனத்தைப் பெற்றார்.

இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் எல்லாம் இவர் செய்யும் சேட்டையும், பாடிய பாடல்களினால் மட்டுமல்லாமல், இவர் வெகுளியான பெண் போல் நடந்து கொள்வதால் அப்படியே ரசிகர்களும் பார்த்து ரசித்தனர். இப்படி ஒரு தங்கச்சி நம்ம வீட்டில் இருந்தால் நல்லா இருக்கும் என பலரையும் ஏங்க விட்டார்

இவ்வாறு சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப் படங்களை வரிசையாக நடித்துக்கொண்டிருக்கும் இந்தப் பாடகி, இன்ஸ்டாகிராமில் இவர் போடும் ரீல்ஸ் எக்கச்சக்கமான லைக்குகளையும் ஷார்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.

அத்துடன் இவர் தற்போது பெரும்பாலான கடை திறப்புவிழா, மேலும் விளம்பரங்களிலும் பங்கேற்பதற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறாராம். இதனால் திமிர தலைக்கேறிய பாடகியை தற்போது படங்களில் நடிக்க அழைத்தால் பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறுகிறாராம்.

அத்துடன்சின்ன சின்ன நடிகர்கள் நடிக்கும் படங்கள் என்றால், அந்த கதையை கேட்க கூட தயாராக இல்லையாம். மேலும்  ஹிட் கொடுக்கும் இயக்குனர்களின் படம் என்றால் மட்டுமே உடனே சரி என்று சொல்லி விடுகிறாராம்.

இப்படி வளரும் போதே அளவுக்கதிகமாக கண்டிஷன் போட்டு ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேட்கப் போனால் நான் ரொம்ப பெரிய பிரபலம் அப்படி தான் இருப்பேன் என்றும் தெனாவட்டாக பதில் சொல்கிறார்.

- Advertisement -spot_img

Trending News