ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 16, 2025

ஆமை வேகத்தில் செல்லும் படப்பிடிப்பு.. பெரும்புள்ளியால் நம்பர் நடிகையின் கணவருக்கு ஏற்பட்ட சிக்கல்

Gossip: சமீபகாலமாக அந்த நடிகை சட்ட ரீதியான சிக்கலை சந்தித்து வருகிறார். சினிமாவிலும், சொந்த வாழ்க்கையிலும் அடி மேல் அடி விழுந்தது. இப்போது அவரது கணவர் எடுக்கும் படத்திலும் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம்.

அதாவது சமீபத்தில் ஒரு நடிகரின் படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. அவரின் படத்தை தான் நம்பர் நடிகையின் கணவர் எடுத்து வருகிறார். ஆனால் படப்பிடிப்பு என்னமோ ஆமை வேகத்தில் தான் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் நடிகை ஆரம்பத்தில் பெரும்புள்ளி ஒருவருடன் படங்களில் நடித்து வந்தார். இவர்களை இணைத்து வைத்து அப்போது கிசுகிசுக்களும் வெளியானது. இந்நிலையில் அந்த அரசியல் புள்ளி நம்பர் நடிகையின் கணவர் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க பெரும் தொகை வாங்கி இருக்கிறார்.

பிரபலத்தால் நடிகையின் கணவருக்கு ஏற்பட்ட சிக்கல்

ஆனால் இப்போது படத்தில் நடிக்காமல் பெரும் தொந்தரவு கொடுத்து வருகிறார். இதனால் படம் எடுப்பது ரொம்ப சிரமமாக இருப்பதாக கவலையில் இருக்கிறார் நடிகையின் கணவர். எப்படிடா இந்த படத்தை எடுத்து முடிப்போம் என்று உள்ளார்.

இது ஒரு புறம் இருக்க இந்த படத்திற்காக கோடிகளை வாரி இரைத்திருக்கிறாராம் நம்பர் நடிகை. ஆகையால் படம் வெளியாகாமல் இருந்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க கூடும் என்ற கவலையில் நடிகை இருக்கிறார்.

இதனால் பெரும்புள்ளியிடம் கணவர் மற்றும் மனைவி இருவரும் படத்தில் அடித்து கொடுத்து எந்த சிக்கலும் செய்ய வேண்டாம் என்று கேட்க உள்ளனராம். அதற்கு அவர் அசைவு கொடுத்தால் தான் படம் வெளியாகும் என்கின்றனர் கோலிவுட் வட்டாரம்.

Trending News