Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி எதற்காக நிச்சயதார்த்தத்தை நிறுத்தினார் பசுபதியை ஏன் ஜெயிலுக்கு அனுப்பினார் என்ற விஷயத்தை தாத்தா மற்றும் விஜய் புரிந்து கொண்டார்கள். அதாவது வன்மத்துடன் இருக்கும் ராகினி மற்றும் பசுபதி இந்த வீட்டிற்குள் நுழைந்தால் குடும்பமே இரண்டாகிவிடும் என்ற நல்லெண்ணத்தில் தான் காவிரி இதே மாதிரி ஒரு விஷயத்தை துணிந்து பண்ணி இருக்கிறார் என்று உணர்ந்து விட்டார்கள்.
ஆனால் அதற்கு முன் விஜய், காவிரியை திட்டி அசிங்கப்படுத்தி விட்டார். அதனால் காவேரி என்னால தான் உங்க குடும்பத்திற்கு பிரச்சினை இருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு நான் இந்த வீட்டில் இருந்தா தானே என்னால பிரச்சினை வரும். இனியும் என்னால் எந்த கஷ்டமும் வேண்டாம். நான் வீட்டை விட்டு போய்விடுகிறேன் என்று காவேரி லெட்டர் எழுதி வைத்து விடுகிறார்.
இதை பார்த்த விஜய் அதிர்ச்சியில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் புலம்ப ஆரம்பிக்கிறார். அது மட்டும் இல்லாமல் காவிரி இல்லாத வாழ்க்கை என்னால் நினைச்சு கூட பார்க்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு உணர்ச்சி பூர்வமாக கொந்தளித்து விட்டார். அத்துடன் காவிரி இல்லை என்று தெரிந்த தாத்தாவும் காவிரியை கூட்டிட்டு வராமல் நீ வீட்டுக்கு வரக்கூடாது என்று விஜய் இடம் சொல்லிவிட்டார்.
விஜய் காவேரியின் பிரிவு ஏற்பட போகும் நெருக்கம்
உடனே விஜய் தெருத்தெருவாக காவேரியை தேடிக் கொண்டு அழைகிறார். பொதுவாக எந்த ஒரு விஷயமும் பக்கத்தில் இருக்கும் பொழுது அதனுடைய அருமை தெரியாது. நம் கைவிட்டுப் போகும் பொழுது தான் அதற்காக ஏங்கி அழுது உசுர கொடுக்கும் அளவிற்கு ரண வேதனையில் கொந்தளிப்போம்.
அப்படித்தான் இப்பொழுது விஜய் நிலமை இருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவிரியை கண்டுபிடிப்பதற்காக பிரண்ட்ஸ் வீட்டிற்கு போகிறார். அங்கே ஒருவர் காவிரிக்கு கொடைக்கானலில் தான் ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் நீங்கள் அங்கு போய் தேடினால் கண்டிப்பாக காவிரியை கண்டுபிடித்து விடலாம் என்று சொல்கிறார்.
உடனே விஜய்யும் காவேரியை தேடி கொடைக்கானலுக்கு போகிறார். அந்த வகையில் இவர்கள் இருவருடைய பிரிவு தான் இவர்களின் நெருக்கத்திற்கு வழி வகுக்க போகிறது. விஜய்யை பிரிந்து காவேரியாலையும் இருக்க முடியாது. காவேரி இல்லாமல் விஜய்யும் இருக்க முடியாது. அந்த வகையில் கொடைக்கானலில் இவர்கள் சந்திக்கும் பொழுது கண்டிப்பாக ஒரு செம்மையான சம்பவம் இருக்கிறது.
இதைத்தான் எதிர்பார்க்கிறோம் என்று சொல்லுவதற்கு ஏற்ப காவிரி விஜய் ஒன்று சேரப் போகிறார்கள். தாத்தா ஆசைப்பட்ட மாதிரி கூடிய விரைவில் இவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் ஏற்படப்போகிறது. ஆனால் இதையெல்லாம் கலைக்கும் விதமாக பசுபதி மற்றும் ராகினியின் ஆட்டம் தொடர போகிறது.
ஏற்கனவே ராகினி, அஜய்யை கல்யாணம் பண்ணிட்டு வந்து காவிரியை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தார். தற்போது தொடர்ந்து அவமானத்தையும் அப்பா ஜெயிலுக்கு போன கோபத்தையும் மனதில் வைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் அஜய்யை திருமணம் பண்ணிட்டு வந்து விஜய் வீட்டிற்கு போகப் போகிறார்.
அந்த வகையில் காவிரிக்கும் ராகினிக்கும் தினமும் யுத்தம் நடக்கப்போகிறது. அப்படி ஒவ்வொரு யுத்தத்துக்கும் பின்னாடியில் காவிரிக்கு பக்கபலமாக இருந்து உதவ போவது விஜய் தான். தொடர்ந்து இனிவரும் எபிசோடுகள் ரொம்பவே சுவாரசியமாக இருக்கப் போகிறது.