அணைய போட்டு ஆத்த வேணா தடுக்கலாம், காத்த தடுக்க முடியாது.. அனல் பறக்கும் விஜய்யின் பேச்சு

Vijay : விஜய் அரசியலில் ஃபுல் ஃபார்ம்மில் இறங்கி இருக்கிறார் என்பதற்கு இன்றைய பொதுக்கூட்டமே போதும். தன்னுடைய அசுரத்தனமான பேச்சியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.

அந்த வகையில் நேரடியாக திமுக மற்றும் பிஜேபி ஆகியவற்றை எதிர்த்து அவர் பேசியது தொண்டர்களிடம் கைதட்டளை பெற்றிருக்கிறது. பொதுவாகவே அவரது பட விழாக்களில் குட்டி ஸ்டோரிக்கு ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

அதுபோல இந்த மேடைப்பேச்சியில் சரமாரியான பஞ்ச் டயலாக் மூலம் அடித்து நொறுக்கி இருக்கிறார். அதில் நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சராகனும்னு கனவு காண்றான்னு சொல்றீங்க, அது நடக்கவே நடக்காதுன்னு சொல்றீங்க.

விஜய்யின் பேச்சால் அதிர்ந்து போன அரங்கம்

அப்புறம் ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொடுக்குறீங்க. அணைய போட்டு ஆத்த வேணா தடுக்கலாம், காத்த தடுக்க முடியாது.

அதையும் மீறி தடுக்க நினைச்சா சாதாரணமாக இருக்க காத்து சூறாவளி மாறும், ஏன் சக்தி மிக்க புயலா கூட மாறும் என்று ஆவேசமாக விஜய் பேசி இருக்கிறார்.

இதைக் கேட்டு படத்தில் பேசும் வசனம் போல விஜய் இங்கே பேசுகிறார் என்ற விமர்சனமும் வருகிறது. ஆனால் விஜயினால் ஒரு கண்டிப்பான மாற்றம் வரும் என்றும் பலர் நம்புகின்றனர்.

மேலும் ஒவ்வொரு முறை தவெக சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தும் போது பல்வேறு இடையூறுகள் கொடுக்கப்படுகிறது. அந்தக் கோபத்தின் வெளிப்பாடாகத்தான் விஜய் இவ்வாறு பேசி இருக்கிறார்.

Leave a Comment