சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

புரட்டாசி மாதத்தில் மங்களகரமாக ஆரம்பமாகும் குழாயடி சண்டை.. உருளப்போகும் சேதுபதி தலை

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது விஜய் சேதுபதிதான் என்ற அதிகாரபூர்வ ப்ரோமோவும் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியது விஜய் டிவி.

குறிப்பாக ஆண்டவர் பல இடங்களில் தாக்கப்பட்டதனால, என்ன தான் செய்ய போகிறார்கள் இந்த சீசனில் என்றும் எதிர்நோக்கி இருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டு காலமாக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஏற்கனவே 7 சீசன் கடந்த நிலையில் தற்போது 8 வது சீசனில் ரசிகர்களுக்கு பல ட்விஸ்ட் காத்திருக்கிறது. கடந்த சீசனில் பிரதிப் ஆண்டனியை வெளியில் அனுப்பியதால், கமல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

வழக்கமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் தான் ட்ரோல் செய்யப்படுவார்கள். ஆனால், கடந்த சீசனில் கமலை இணையவாசிகள் வச்சு செய்துவிட்டார்கள். இதற்க்கு மேல் நாம் இங்கு இருந்தால், நமக்கு மரியாதை கிடையாது என்று, கமலஹாசனும் டீசெண்டாக விலகிவிட்டார்.

இதை தொடர்ந்து, விஜய் சேதுபதி, தொகுத்து வழங்க போகிறார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி க்கு, 50 கோடி ரூபாய் பேசப்பட்டதாக தகவல் கிடைத்திருந்தது. இப்படி இருக்க, யார் யார் போட்டியாளர்கள், என்று முதல் ஆரம்பமாகிறது என்று ரசிகர்கள் கேட்டு நச்சரிக்க துவங்கி விட்டனர்.

அதனால் தற்போது, பிக் பாஸ் ஆரம்பமாகும் தேதியை வெளியிட்டுள்ளனர். இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு. போட்டியாளாராக, ஷாலின் ஜோயா, TTF வாசன், CWC புகழ், மகாபா, ரோஷினி ஹரிப்ரியன், விஜே விஷால், அக்ஷிதா அசோக், திவ்யா துரைசாமி, ஷாலின் ஜோயா, சம்யுக்தா விஸ்வநாதன், அமலா ஷாஜி, ஜாக்குலின்,தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர் செந்தில், வினோத் பாபு, பவித்ரா ஜனனி உள்ளிட்டோர்களின் பெயர்களும் இதில் அடிப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து, அக்டோபர் 8ஆம் தேதி, பிக் பாஸ் ஆரம்பமாக போகிறது. மேலும், டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆகமொத்தத்தில், புரட்டாசி மாதம் மங்களகரமாக குழாயடி சண்டை ஆரம்பமாக போகிறது என்று, சமூகவலைத்தளங்களில், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News